வீழ்த்த நினைக்கும் ஆயிரம் கொக்குகளுக்கு சிவா கெளுத்தி மீன் - இயக்குனர் இரா.சரவணன் ஆவேசம்

By subhashini · 25/2/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், சிங்கம் புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் இரா. சரவணன், நான் பத்திரிகையாளராக 15 வருடங்கள் இருந்திருக்கிறேன். சினிமாவில் பத்து வருடங்கள் இருக்கிறேன். இந்த 25 வருடங்களில் நான் எத்தனையோ அரசியல் ஆளுமைகளை, பிரபலங்களை பார்த்திருக்கிறேன், கடந்து வந்திருக்கிறேன். ஆனால், என்னால் கணிக்க முடியாத ஒரே நபர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான்.

தாய் கிழவி:

எந்த இடத்தில் என்ன செய்வார் என்று கணிக்கவே முடியாது. தேர்தல் நேரத்தில் கட்சிகள் யார் யாருடன் கூட்டணி? வைக்கிறார்கள் என்பதை கூட நான் சொல்லிவிடுவேன். ஆனால், இந்த சினிமா துறையில் சிவகார்த்திகேயன் யாருடன் கூட்டணி வைப்பார் என்றே கணிக்க முடியாது. அடுத்து சிவகார்த்திகேயன் இந்த இயக்குனரை வைத்து தான் படம் பண்ணப் போகிறார் என்று ஒரு 10 இயக்குனர்களின் பெயரை வைத்து பட்டியல் வெளியானது. ஆனால், அந்த பட்டியலில் இல்லாத சிவகுமார் முருகேசனை வைத்து தான் படம் பண்ணியிருக்கிறார்.

சரவணன் சொன்னது:

பல விஷயங்களை இந்த படத்தில் இயக்குனர் அசால்டாக செய்திருக்கிறார். இந்த படம் வெளியான பிறகு பெரிய ஹீரோக்கள் பின்னாடி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா இனி நல்ல கதைகள் பின்னாடி ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொட்டுக்காளி படம் வெளிவந்த போது நான் தம்பி சிவகார்த்திகேயனை சந்திக்கப் போயிருந்தேன். படம் வெற்றி பெற்றால் சம்பாதித்து கொள்வேன். படம் தோற்றால் அதற்கான கடனை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், இந்த படம் எல்லாம் தியேட்டருக்கு வரலாமா? என்று எப்படி கேட்கிறார்கள் என பேசியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=ebT0-SA37Q0

சிவா பற்றி சொன்னது:

அதுமட்டுமில்லாமல் வந்தோமா? நடிச்சோமா? இல்லாமல் எதுக்கு படம் எல்லாம் தயாரிக்கிறாருன்னு சிவகார்த்திகேயனை விமர்சித்தார்கள். அந்த விமர்சனங்களுக்கான பதிலடிதான் இந்த தாய்க்கிழவி. நியாயமான விமர்சனங்களை அவர் ஏற்றுக்கொள்வார். கொக்கு ஒருபோதும் கெளுத்தி மீன் விழுங்காது. காரணம் மீனின் முள் குத்தி கொக்கு இறந்துவிடும். இயல்பான எதிர்வினைகளை விமர்சனங்களை வைத்தால் பிரச்சனை கிடையாது. ஆனால், வன்மங்களால் சிவகார்த்திகேயனை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற ஆயிரம் கொக்குகளுக்கு சொல்கிறேன் சிவகார்த்திகேயன் ஒரு கெளுத்தி மீன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full