காதல் கோட்டை படத்திற்கு தேசிய விருது கிடைத்த செய்தி கேட்டவுடன் மயங்கி விழுந்த பிரபலம் - யார் தெரியுமா?
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான அகத்தியன், தான் இயக்கிய 'காதல் கோட்டை' படத்திற்கு தேசிய விருது கிடைத்த செய்தி கேட்டு மயங்கி விழுந்த சுவாரசியமான தகவல்தான் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காதல் கோட்டை. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்கள் காலம் கடந்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் உள்ள படம் தான் அஜித்தின் காதல் கோட்டை படம். இந்த படத்தில் அஜித்துடன் தேவயானி, ஹீரா ராசகோபால் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். சிவசக்தி பாண்டியன் தயாரித்த இப்படம் இன்றும் கூட ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் படமாக உள்ளது.
90ஸ் காதல் படங்கள்:
ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமா காதலுக்கு ஒவ்வொரு பரிமாணத்தை கொடுத்து வருகிறது. இந்நிலையில் 90களில் வெளிவந்த பல காதல் படங்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அப்போது வெளியான காதல் படங்களில் ஒரே தெருவில் வசிக்கும் காதல், பேருந்து காதல், ரயில் காதல், பார்க்காமல் காதல், சாதி மதம் கடந்த காதல் என பல விதமான காதல் கதைகளின் மூலம் மக்களை ஈர்த்திருப்பார்கள் இயக்குனர்கள்.
காதல் கோட்டை குறித்து:
அந்த வகையில் ஊட்டியில் இருக்கும் கமலிக்கும் சென்னையில் வசிக்கும் சூர்யாவுக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே காதல் மலர்கிறது. கடிதங்கள் மட்டுமே இவர்களின் காதலுக்கு பாலமாய் இருக்கும். இந்தப் படத்தின் கதையை இயக்குனர் அகத்தியன் பல தயாரிப்பாளர்களிடம் கூறிய போது யாரும் படத்தை எடுக்க முன்வர வில்லையாம். பார்க்காமல் எப்படி காதலிப்பார்கள் என்றும் படத்தில் லாஜிக் இல்லை என்றும் கூறி பலர் இப்படத்தை நிராகரித்துள்ளனர்.
அதன் பின் இயக்குனர் அகத்தியன் ஏற்கனவே இயக்கிய வான்மதி படத்தின் தயாரிப்பாளரே இப்படத்தை தயாரிக்க முன்வந்தாராம். ஆனால் படத்தில் முதலில் இருவரும் பிரிவது போல கிளைமாக்ஸ் வைத்திருந்தாராம் இயக்குனர், அந்தக் கிளைமாக்ஸை இருவரும் இணைவது போல் மாற்றி அமைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கூறவே, படத்தின் கிளைமாக்ஸ் இல் அஜித்தும் தேவயானியும் சேர்வது போல மாற்றினாராம் இயக்குனர் அகத்தியன்.
பல விருதுகளை அள்ளிக் குவித்தது:
அதனைத் தொடர்ந்து இன்றும் காதல் கோட்டையின் கிளைமாக்ஸ் ரசிகர்கள் கொண்டாடும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒன்றாக உள்ளது. படம் வெளியாகி மாபெரும் ஹீட் அடித்தது. இசையமைப்பாளர் தேவாவின் இசையில் உருவான ஒவ்வொரு பாடலும் இன்றும் மக்களின் பேவோரைட் தான். அதன்பின் இப்படம் பல விருதுகளை அள்ளி குவித்ததோடு, இந்தியாவின் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது இயக்குனர் அகத்தியனுக்கு கிடைத்தது.
மயங்கி விழுந்த இயக்குனர்:
அப்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கூறுகையில், "காதல் கோட்டை படத்திற்காக அகத்தியனுக்கு தேசிய விருது கிடைத்த செய்தி எனக்கு தெரிந்தவுடன், நான் அவருக்கு போன் செய்து கூறினேன். அந்தப் பக்கம் சத்தத்தையே காணவில்லை. இந்த செய்தியை கேட்டவுடன் வேறொரு படப்பிடிப்பில் இருந்த அகத்தியன் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அப்போது அங்கு படப்பிடிப்பில் இருந்த பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் என்னவோ ஏதோ என்று பதறி அவரிடம் கேட்கும்போது, எனக்கு தேசிய விருது கிடைத்திருக்கு என்று கூற இதுக்கு ஏயா மயங்கி விழுந்த என்று அனைவரும் கலாய்த்து கொண்டார்கள்" என்று புன்னகையோடு கூறினார்.