நேர்மை இல்லாத நடிகர் சூர்யா அறிக்கை, கிழித்து தொங்கவிட்ட இயக்குனர் கௌதமன் - பின்னணி இது தான்

By subhashini · 22/9/2025

சூர்யாவை தாக்கி இயக்குனர் கௌதமன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு முரளி- சிம்ரன் நடிப்பில் வெளிவந்த கனவே கலையாதே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வி. கௌதமன். அதனை தொடர்ந்து இவர் மகிழ்ச்சி என்ற படத்தை இயக்கி இருந்தார். அதோடு அந்த படத்திலும் இவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படம் 2010 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்தது.

மேலும், 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது இவர் படையாண்ட மாவீரா என்ற படத்தை இயக்கி நடிகராகவும் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. மறைந்த அரசியல் தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் முக்கிய ரோலில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

படவிழாவில் கௌதமன்:

வைரமுத்து தான் இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது இயக்குனரும் நடிகரும் ஆன கௌதமன் அளித்த பேட்டியில், காடுவெட்டி குரு குறித்து வெளியான தகவல்களால் எனக்கு நிறைய கோபம் வந்தது. அந்த கோபம் தான் எனக்கு இந்த படம் உருவாக காரணம். மக்களை மோதவிட்டு கொண்டு இந்த மொழிக்கும் இனத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு கூட்டம் ஆண்டு கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் ஜெய் பீம் என்ற ஒரு படம் வருது.

https://www.youtube.com/watch?v=RV6Vithcw_w

கௌதமன் பேட்டி:

அற்புதமாக படம் அதில் மாற்று கருத்தை கிடையாது. அந்த படத்தினுடைய உண்மை கதையில் அந்த காவல்துறை அதிகாரி முதலியார் சமூகத்தில் கிறிஸ்துவத்தை சேர்ந்தவர். அவருடைய பெயர் ஆரோக்கியசாமி. ஆனால், அவருடைய பெயரை படத்தில் குரு என்று மாற்றி இருக்கிறார்கள். அந்த கொடூரமான ஒருவரை அடித்து கொன்ற காவல்துறை அதிகாரி கேரக்டருக்கு குரு என்று பெயர் வைத்து அக்னி குண்டத்தை மாட்டி படம் முழுவதுமே ஜாதி வெறியில் தான் அடித்துக் கொன்று விட்டான் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

சூர்யா பற்றி சொன்னது:

இதன் மூலம் தப்பான பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எங்கள் சமூகத்தினர் சொல்லியும் திமிராக அறிக்கை விட்டார்கள். இது தொடர்பாக சூர்யா அறிக்கை விட்டார். இது தொடர்பாக சிவகுமார் சாரிடமும் சொன்னோம். அதற்கு அவர் ராமதாஸ் ஐயாவிடம் பேசுகிறேன் என்றார். இருவரும் சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. பின் ஞானவேல், சூர்யாவிற்கும் இதற்கு சம்பந்தம் இல்லை. யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தப்படுவதாக சொன்னால். இது நேர்மையில்லாத அறிக்கை என்று கொந்தளித்து பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full