ஜன நாயகன் படம் பற்றி இயக்குனர் எச்.வினோத் சொன்ன அடிபொலி அப்டேட் - என்ன தெரியுமா?
ஜனநாயகன் படம் தொடர்பாக இயக்குனர் வினோத் கொத்து இருக்கும் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் மத்தியில் தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும், இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் விஜய் அரசியலுக்கு வந்தது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது.
விஜய் பற்றிய தகவல்:
இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கல் விருந்தாக ஜனநாயகன் படம் வெளியாக இருக்கிறது. இது ஒரு அரசியல் கலந்த கமர்சியல் படமாக உருவாகி இருக்கிறது. ஏற்கனவே ஜனநாயகன் படத்தின் போஸ்டர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஜனநாயகன் படம்:
தற்போது வெளியீட்டு அறிவிப்பு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த படத்தில் விஜய்யின் ஃபேவரட் இயக்குனர்களான லோகேஷ், அட்லி, நெல்சன் ஆகியோர் ஒரு பாடல் காட்சியில் சேமியா ரோலில் வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியிலேயே ஜனநாயகன் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
வினோத் அப்டேட் :
இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது
இப்படி இருக்கும் நிலையில் ஜனநாயகன் படம் குறித்து ஒரு சுவாரசியமான அப்டேட்டை இயக்குனர் ஹச் சொல்லி இருக்கிறார். அதாவது பேட்டியில் வினோத், ஜனநாயகன் படம் விஜய்யினுடைய ஃபேர்வெல் படமாக இருக்கும். ஒரு மாஸ் ஆக்சன் படத்தை எதிர்பார்க்கலாம். இந்த படம் ஒரு முழுமையான விருந்தாக ரசிகர்களுக்கு இருக்கும் என்று கூறி இருக்கிறார்.