எம்.ஜி.ஆர் சொன்னத கடைசி வரை சரோஜா அம்மா செய்தார் - வேதனையில் கே.எஸ்.ரவிக்குமார் சொன்னது
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி பற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் சரோஜாதேவி. இவர் கன்னடத்தை சேர்ந்தவர். இருந்தாலுமே இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்தார். இவரை எல்லோரும் கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று தான் அழைப்பார்கள். அவரின் நடை, உடை, பேச்சு எல்லாம் ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்கா இருக்கு.
இவர் 1955 ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் கன்னட மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக, இவர் தமிழில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் இவர் ஆற்றிய பங்கிற்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் எல்லாம் கொடுக்கப்பட்டிருந்தது.
சரோஜா தேவி குறித்த தகவல்:
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் இவருக்கு கொடுத்திருந்தார்கள். அதற்குப் பின் இவர் 2019 ஆம் ஆண்டு வரை படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வந்தார். பின் வயது மூப்பின் காரணமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கிடையே இவர் ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருமே 1986 ஆம் ஆண்டிலேயே உடல்நல குறைவால் இறந்துவிட்டார். இருந்தாலுமே சரோஜாதேவி மன தைரியத்துடன் போராடி தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
https://www.youtube.com/watch?v=DEaLQkJfHL8
சரோஜா தேவி இறப்பு:
இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகை சரோஜாதேவி வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் காலமாகி இருந்தார். இவருக்கு தற்போது 87 வயது. பெங்களூரில் தான் இவர் இறந்திருக்கிறார். இவருடைய மறைவு தென்னிந்திய சினிமா உலகில் பெரும் இழப்பை கொடுத்திருக்கிறது.
மேலும், இவர் சினிமா மட்டுமில்லாமல் பொது சேவையையுமே செய்து இருக்கிறார். அந்த வகையில் இவருடைய கண்களும் தானம் செய்யப்பட்டிருக்கிறது. நேற்று சரோஜாதேவியின் உடல் கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான தஷாவராவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி:
திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று சரோஜாதேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான கே.எஸ் ரவிக்குமார் அளித்த பேட்டியில், நான் இயக்கிய ஆதவன் படத்தில் சரோஜாதேவி அம்மா நடித்திருந்தார். அவரை அந்த படத்தில் நடிக்க வைக்க நான் ரொம்பவே தொல்லை செய்திருந்தேன். அதுதான் அவங்க கடைசி படம். செட்டுக்குள் வரும்போது வணக்கம் டைரக்டர் சார் என்று சொல்லிக் கொண்டே மேக்கப் போட தான் வருவார். அவ்வளவு அர்ப்பணிப்போடு இருப்பார். வெளியே வரும்போது எப்பவும் மேக்கப் போட தான் வெளியே வரணும் என்று எம்ஜிஆர் சார் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=HNq5b93d88Y
சரோஜா தேவி பற்றி சொன்னது:
அதனால் வீட்டில் யாராவது சந்திக்க வந்தால் கூட மேக்கப் போடுதான் சந்திப்பேன் என்று என்னிடம் சொல்லுவார். ஆதவன் படத்தில் கூட அதனால் தான் அந்த வசனம் வைத்திருப்பேன். எப்பவும் மேக்கப்போட தான் இருப்பார். நடிகர் அர்ஜுன் மகளின் திருமண விழாவில் தான் சரோஜா அம்மாவை கடைசியாக பார்த்தேன். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். அப்பவே அவருக்கு உடம்பு சரியில்லை. அப்படி இருந்தும் பெங்களூரில் இருந்து வந்து எல்லா விழாவிலுமே சரோஜா அம்மா கலந்து கொள்வார். அவருடைய இறப்பு செய்தி எனக்கு ரொம்பவே வருத்தத்தை கொடுத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.