காதலில் எல்லாம் மாறும், நிறைய அனுபவம் கிடைத்தது - கிருத்திகா உதயநிதி எஸ்க்குளுசிவ் பேட்டி
தன்னுடைய சினிமா பயணம் பயணம் குறித்து இயக்குனர் கிருத்திகா உதயநிதி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனராக கிருத்திகா உதயநிதி திகழ்கிறார். இவர் வேற யாரும் இல்லை, தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும், தமிழ்நாட்டின் துணை முதல்வராகவும் இருக்க கூடிய உதயநிதியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் தான் இந்த படத்தை தயாரித்து இருந்தார். இந்த படத்தில் சிவா, பிரியா ஆனந்த் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்திருந்தது. அதை தொடர்ந்து இவர் காளி, காகித ராக்கெட் உட்பட சில படங்களை இயக்கி இருந்தார். தற்போது இவருடைய இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் காதலிக்க நேரமில்லை.
காதலிக்க நேரமில்லை படம்:
இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, வினய், சுனில், ரமேஷ், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் சுனில், பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் மூலமாக உதயநிதி ஸ்டாலின் தான் தயாரித்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் கிருத்திகா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் யோசித்த கதை. இந்த நேரத்தில் இந்த கதை சொன்னால் பெரிய கதையாக இருக்கும் என்று தான் நினைத்தேன்.
கிருத்திகா பேட்டி:
காதல் எப்போதும் எல்லாவற்றையும் வெல்லும். அது நமக்கு தெரிந்தாலும் காதலில் தேவைகள், அமைப்பு அமைப்பு எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும். காதல் இன்னும் வலுவாக தான் இருக்கும். நான் படத்திற்கான விளம்பரங்களையும், தாக்கத்தையும் மக்களை பூர்த்தி செய்யுமா? என்று நினைக்கவில்லை. இந்த படம் ஒரு நல்ல விஷயமாக இருக்கும் என்று தான் நினைத்தேன். ரவி-நித்யா மேனன் இணைந்து நடித்தால் புதுமையாக இருக்கும் என்று நினைத்தேன். ஹீரோ- ஹீரோயினி இருவருக்கும் சமமான கேரக்டர் இருக்கும். இது போன்ற கதைக்களத்தை சில நடிகர்கள் தான் தேர்வு செய்வார்கள்.
சினிமா பயணம்:
அந்த வகையில் ரவி தைரியமாக இந்த கதைக்கு ஓகே சொல்லி இருப்பது மிகப்பெரிய விஷயம்.
என்னுடைய எல்லா படங்களுமே எப்போதும் ஒரு நாடகத் தன்மையாலும் உணர்ச்சிகளால் தான் நகரும். என்னுடைய தவறுகளில் இருந்து கூட சில கற்றல் அனுபவம் எனக்கு கிடைத்தது. என்னோட கதைகள் மீதும் படத்தை இயக்குவதன் மீதும் நான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய முதல் படத்தை எடுத்த போது எனக்கு அனுபவம் கிடையாது. அதிக உலக அறிவு, சினிமா பற்றிய புரிதலும் கிடையாது. இப்போது இப்போது நான் வெளிநாட்டு மொழி படங்களை எல்லாம் பார்க்கிறேன். அவர்கள் சரியாக என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கிறேன்.
கற்றல் திறன்:
ஒரு படத்தை உருவாக்குவதில் நாம் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதை எல்லாம் புரிந்து கொள்ள நான் இங்குள்ள இயக்குனர்களுடன் பேசுகிறேன். என்னுடைய கற்றலும் சிறப்பாக இருக்கிறது. இருந்தாலுமே எனக்கு இன்னும் திரைப்படத்தை இயக்குவது தெரியாது என்ற உணர்வு இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் என்னுடைய ஸ்கிரிப்டுக்கு ஓகே சொன்னது பெரிய விஷயம். ஒரு திரைப்பட இயக்குனராக இது என்னுடைய வாழ்க்கையில் சிறந்த தருணமாக பார்க்கிறேன். ரகுமான், நித்யா மேனன், ரவி ஆகியோருடன் வேலை பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் ஒரு நல்ல படைப்பை வழங்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை உணர்ந்தேன் என்று கூறியிருக்கிறார்.