அந்த மாதிரி வீடியோவ கழுகு மாதிரி பார்க்க கூட்டம் இருக்கு - உதவி இயக்குனர் கௌசல்யா சேகர் ஆவேசம்
விஜய் டிவியில் எப்போதுமே டிஆர்பியில் நம்பர் 1 சீரியல் ஆக இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை எஸ். குமரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த தொடரில் ஹீரோவாக முத்து என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த், ஹீரோயினியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் கோமதி பிரியாவும் நடிக்கிறார்கள். இவர்களை அடுத்து சீரியலில் சுந்தர்ராஜன், அணிலா, சல்மா, ஸ்ரீ தேவா, பிரீத்தி உட்பட பலர் நடிக்கிறர்கள். அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் வாரம் வாரம் சன் டிவி சீரியலுக்கே போட்டியாக சிறகடிக்க ஆசை சீரியல் தான் இருக்கிறது.
மேலும், இந்த சீரியலில் ரோகினியின் தோழியாக வித்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சுருதி நாராயணன். இந்த சீரியலில் இவர் ரோகினி செய்யும் எல்லா தில்லாலங்கடி வேலைக்கும் உறுதுணையாக நிற்கிறார். இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பார்த்து சிலர் இது மார்ப்பிங் வீடியோ என்று கூறுகிறார்கள்.
சீரியல் ஸ்ருதி நாராயணன் பதிவு:
இன்னும் சிலர் படத்தின் வாய்ப்புக்காக தான் இவர் இப்படியெல்லாம் வீடியோ செய்து வெளியிடுகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால், இவருடைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. பின் இது தொடர்பாக சுருதி நாராயணன் போட்ட பதிவில், இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், மற்றொருவர் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது. சரியானதை கண்டுபிடிங்கள் என்று கேட்டிருக்கிறார். அதன் பின் உண்மையான பெண் யார், ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட பெண் யார் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் தன்னைப் பற்றி பரவும் வீடியோ மார்ப்பிங் செய்யப்பட்டது என்று கூறியிருந்தார்.
ஸ்ருதி நாராயணன் ஆவேசம்:
இருந்துமேவிடாமல் சுருதி நாராயணனை சோசியல் மீடியாவில் மோசமாக விமர்சித்தும் திட்டியும் வருகிறார்கள். அதோடு சிலர், ஸ்ருதி நாராயணனின் instagram பக்கத்தில் வீடியோ லிங்க் அனுப்புங்கள் என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக ஸ்ருதி நாராயணன் பதிவில், நானும் பெண்தான். எனக்குமே உணர்ச்சிகள் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அதை நீங்கள் ரொம்ப மோசமாக விமர்சித்து போடுகிறீர்கள். இப்படி காட்டுத்தீயாய் போல பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்களுடைய அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண்தான். அவர்களுக்குமே என்னை போன்ற உடல் இருக்கிறது. கமெண்டில் என்னைத்தான் எல்லோருமே குறை சொல்கிறார்கள். அந்த வீடியோவை லிங்க் செய்தவரை எந்த கேள்வியுமே கேட்கவில்லையே ஏன்? என்று ஆக்ரோஷமாக கூறி இருந்தார்.
கவுசல்யா சங்கர் பதிவு:
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சினிமா துறையில் பணியாற்றி இருக்கும் உதவி இயக்குனர் கவுசல்யா சங்கர் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், சமீபத்தில் சீரியல் நடிகை வாய்ப்புகாக தன்னை இழந்த கதையும் , அந்த வீடியோவை காண கழுகுகள் போல் சோசியல் மீடியாவில் திரண்ட கூட்டத்தையும் காண முடிந்தது. இனி வாய்ப்பு தேடும் பெண்களுக்கு இது ஒரு நல்ல பாடம். தன்னை இழந்து எளிதில் பெற கூடிய வாய்ப்பு என்றுமே நிலைத்திருக்காது. நான் திரைத்துறைக்கு வந்து 5 வருடங்கள் ஆகி விட்டது. பெரிதாக ஒன்றும் இன்று வரை சாதிக்கவில்லை . காரணம் ஆமை போல் சென்றாலும் நேர்மையாக சாதிப்போம், அதுவரை முயற்சி மட்டுமே செய்வோம் என்ற குறிக்கோள்.
பெரும்பாலும் 80% ஆட்கள் சீரியலாகட்டும் அல்லது திரைபடமாகட்டும்,இதுபோல் பெண்களை ஆசை வார்த்தை காண்பித்து பயன்படுத்தி கொள்ளதான் நினைப்பார்கள். நான் ஆரம்பத்திலயே இதுபோல் நபர்களை அடையாளம் கண்டு நிராகரித்துவிடுவேன், இல்லையேல் சோசியல் மீடியாவில் அவர்களை அசிங்கபடுத்தி விட்டு கடந்து விடுவேன். இதனால் பல வாய்ப்புகளை இழந்த கதையும் உண்டு. அவர்களின் பிரத்யோக வார்த்தை நான் கேட்டு வியந்தது“. உனக்கு வாய்ப்பு கொடுத்து எனக்கு என்ன யூஸ் , நாளைக்கே நீ அடுத்த நயன்தராவ ஆகிடுவ அடுத்து என்ன மதிக்காவ போர , உன்ன மாதிரி எத்தனையோ பேர பார்த்துட்டேன்.
அமலாபால யார் அறிமுகம் படுத்துனா நான்தான், நயன்தராவ யார் அறிமுகப்படுத்துனா நான்தான் இப்போ அவங்காலம் எங்க இருக்காங்க நான் எங்க இருக்கேன். see ஒன்ன இழந்தாதான் இன்னொன்ன பெற முடியும் நீயே யோசிச்சிக்கோ, next second eh அவங்க number ah நான் block பண்ணிடுவேன், அந்த வாய்ப்பையும் கூட. இத பெரிது படுத்துனா வளர்வது குள்ளயே உன்ன அழுச்சிகிறன்னும், கொஞ்சம் வளர்ந்த பிறகு சொன்ன அப்பவே சொல்ல வேண்டிதானே இப்போ ஏன் சீன் போடுறன்னும் சொல்ற கூட்டமும் இங்க அதிகம் உண்டு , அதையும் கூட கடந்து வந்துருக்கேன். இங்க எல்லாருமே கெட்டவங்களும் கிடையாது. நல்லவர்களும் இருக்காங்க ஆன நமக்கான நல்லவங்கள அவ்வளவு சீக்கிரம் கடவுள் நம்ம கண்ணுக்கு காட்ட மாட்டார்.
நம்ம எவ்வளவு தூரோம் நேர்மையா இருக்கோமோ அத பார்த்து நமக்கான நேரம், நமக்கான நல்லவங்கள நம்ம லைப்ல திடிர்னு கடவுள் கொண்டு வருவார். அந்த நாள் நமக்கான நாளா இருக்கும்.
அதுவர திண்டாத்ததுடன் போராடுவோம், நாளையின் கொண்டாடத்திற்காக என்று கூறி இருக்கிறார்.