2 வருடம் குடும்பம், நண்பர்கள், சோசியல் மீடியாவை லோகேஷ் கனகராஜ் மறக்க ரஜினி தான் காரணமா? பின்னணி இது தான்

By subhashini · 7/7/2025

கூலி படம் பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் பெரிய கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கூலி படம்:

இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா ஆகியோர் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாகிர் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் நடிகர் ஆமீர் கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கான சர்வதேச விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டைன்மென்ட் நிறுவனம் 86 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமில்லாமல் கூலி படத்தினுடைய வியாபாரமும் சிறப்பாக நடைபெறுகிறது.

லோகேஷ் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கூலி படம் கடந்து 2 வருடங்களாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான வேலைகளில் மட்டும்தான் நான் கவனம் செலுத்தி வந்தேன். என்னுடைய குடும்பம், நண்பர்கள், சமூக ஊடகங்கள் என எதற்குமே நான் நேரத்தை ஒதுக்கவில்லை. என்னுடைய 37 வருட சினிமா வாழ்க்கையிலேயே கூலி படத்திற்காக தான் நான் பெரும் உழைப்பை போட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

ரஜினி திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான வேட்டையன் படத்தில் ரஜினி நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பிசியாக படங்களில் கமிட்டாகி இருக்கிறார் ரஜினி.

behindtalkies AMP · Quick view
View full