'கூலி' படத்தில் ரஜினி குரல் AI மூலம் சேர்க்கப்பட்டதா? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக் - இந்த டீவ்ஸ்ட் எதிர்பார்க்கல

By subhashini · 2/9/2025

AI தொழில்நுட்பம் பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே தொழில்நுட்பம் வளர்வதன் மூலம் நிறைய விளைவுகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பம் பல வகையில் பயன்படுகிறது. இதன் மூலம் பயன்கள் நிறைய இருந்தாலும் விளைவுகளும் நிறைய இருக்கிறது. அதோடு இந்த AI தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர்களின் குரல், இசை என பல வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் AI தொழில்நுட்பம் பற்றி பேசி இருக்கும் விஷயம் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் லோகேஷ் கனகராஜ், சினிமாவில் எதிர்காலத்தில் ஏஐ ஆதிக்கம் அதிகமெல்லாம் இருக்காது. ஏஐ உதவி வேண்டுமானால் சினிமாவில் இருக்கும். அது ஒரு டெக்னாலஜி. அதனுடைய உதவியை பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அதனை எப்படி, எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பது நம்மளுடைய கையில் தான் இருக்கிறது.

AI தொழில்நுட்பம் பற்றி சொன்னது:

கூலி படத்தில் ஏஐ உதவியுடன் தான் ரஜினி சாரோட குரல் சேர்க்கப்பட்டது. மேலும், சிலர் மியூசிக்கில் ஏஐ பயன்படுத்துகிறார்கள். ஆனால், எனக்கு இசைக்கு ஏஐ வேண்டாம். நான் அனிருத்தை பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

https://www.youtube.com/watch?v=Ky_W9zeI-uc

லோகேஷ் திரைப்பயணம்:

அந்த வகையில் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்திற்கு பிக்சர்ஸ் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.

கூலி படம்:

இந்தபடத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் வாரி குவித்து வருகிறது. இதுவரை இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து லோகேஷ் அவர்கள் கார்த்தியின் கைதி 2 படத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full