ஆஸ்கர் குழுவில் முதல் தமிழர் - மணிரத்னத்திற்கு கிடைத்த கெளரவம். ஆஸ்கர் நாயகன் நெகிழ்ச்சி

By subhashini · 29/6/2023

ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக மணிரத்தினம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச அளவில் மிக உயரிய விருதாக வழங்கப்படுவது ஆஸ்கர் விருது. இந்த ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக பல்வேறு நாடுகளை சேர்ந்த திரையுலக கலைஞர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் இருந்து ஏற்கனவே நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது குழுவின் புதிய உறுப்பினர்களுக்கான பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த குழுவில் சேர்வதற்கு தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு போன்றவற்றின் அடிப்படையில் உறுப்பினர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள். மேலும், இந்த 2023 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்கள் 398 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய திரைப்பட பிரபலங்களான இயக்குனர் மணிரத்தினம், இசையமைப்பாளர் கீரவாணி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஒளிப்பதிவாளர் கே கே செந்தில்குமார், தயாரிப்பாளர் கரன் ஜோகர் உட்பட சில பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆஸ்கர் விருது குழு உறுப்பினர் பட்டியல்:

தற்போது இந்த பட்டியல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ஆஸ்கர் விருது குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்களுக்கு பிரபலங்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஆஸ்கர் விருதுக் குழுவில் தேர்வான இயக்குனர் மணிரத்தினத்திற்கு வாழ்த்துக் கூறி ஏ ஆர் ரகுமான் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஆஸ்கர் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இயக்குனர் மணிரத்தினத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஏ.ஆர்.ரகுமான் டீவ்ட்:

பொன்னியின் செல்வன், #ரோஜா, #பாம்பே, #தில் சே மேலும் பல..! ஆஸ்கர் குழுவுக்கு உங்களை வரவேற்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இவரை அடுத்து பல பிரபலங்கள் இயக்குனர் மணிரத்தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படம்:

அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’ படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வந்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் நல்ல வசூல் சாதனை செய்து இருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full