நல்லது சொன்ன சீனியர் நடிகையை இன்சல்ட் செய்த இளம் நடிகை. கடுப்பாகி டோஸ் விட்டுள்ள மிஸ்கின்.

By subhashini · 28/1/2020

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.

தமிழ் சினிமா உலகில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை கொடுப்பதில் மிஷ்கின் கைதேர்ந்தவர். அதுவும் இவருடைய படங்கள் எல்லாம் திர்ல்லர், ஆக்ஷன் போன்ற வகைகளைத் தான் சேர்ந்தது. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவான படம் தான் “சைக்கோ”. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இசைஞானி இளைராஜா அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். பார்வையில்லாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உள்ளார்.

சைக்கோ திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் தொகுப்பாளினி எதார்த்தமாக கேட்ட கேள்விக்கு இயக்குனர் மிஸ்கின் அவர்கள் கூறிய பதில் ஷாக் ஆகும் அளவிற்கு உள்ளது. தற்போது இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பேட்டியில் தொகுப்பாளினி அவர்கள் நீங்கள் பொதுவாகவே இரண்டு நடிகர்களை வைத்து படம் எடுத்தால் அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வரும் என்று சொல்வார்கள். இது குறித்து உங்களுடைய அனுபவம் பத்தி சொல்லுங்க? என்று கேட்டார்.

https://youtu.be/L7u7rCi2dOg

இதற்கு மிஸ்கின் அவர்கள் கூறியது, தற்போது நான் இயக்கிய சைக்கோ படத்திலும் இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். எனக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்சினையும் வரவில்லை. ஆனால், துப்பறிவாளன் படத்தில் அந்த அனுபவம் உள்ளது. துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பின் போது எஸ்கலேட்டரில் வைத்து ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அதில் ஆண்டிரியா அவர்கள் ஜீன் போட்டு இருந்தார். அணு இமானுவேல் லாங் குர்தா போட்டு இருந்தார். அதனால் நடிகை ஆண்டிரியா அவர்கள் நடிகை அனு இம்மானுவேலை பார்த்து போகுமாறு கூறினார்.

அதற்கு அனு இமானுவேல் உங்க வேலையை நீங்க பாருங்க என்று சொன்னார். இதனால் எனக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. அப்போதே நான் அவரை நன்கு திட்டி விட்டேன். அந்த நேரத்தில் மட்டும் என் பக்கத்தில் ஏதாவது பூசணி காய் இருந்து இருந்தால் அவர் உடைய மண்டையிலேயே போட்டு உடைத்து இருப்பேன் என்று ஆக்ரோசமாக கூறினார். இந்த மாதிரி இவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full