என்னை காலி பண்ண பெரிய கூட்டமே வேல செய்யுது - மன வேதனையில் இயக்குநர் மோகன் ஜி

By subhashini · 7/12/2025

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். ‘பழைய வண்ணார்பேட்டை’ என்ற படத்தின் மூலம் தான் மோகன் ஜி இயக்குனராக மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அதோடு இவர் சாதி ரீதியிலான படங்களை தான் எடுத்து வருகிறார். தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் திரௌபதி 2. இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரக்ஷனா இந்துசூடன் திரௌபதி தேவியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் எம்கோனே என்ற முதல் பாடல் இன்று மாலை வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடலை பாடகி சின்மயி பாடியிருக்கிறார்.

மோகன் ஜி படம்:

பின் சில தினங்களுக்கு முன் சமூக பிரச்சனைகளை குறித்து பேசும் பாடகி சின்மயி ஜாதிய படங்களை இயக்கும் மோகன் ஜி படத்தில் பாடுவதா? என்றெல்லாம் பலரும் விமர்சித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள். இது தொடர்பாக மன்னிப்பு கேட்டு பாடகி சின்மயி பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், ஜிப்ரான் எனக்கு 18 ஆண்டுகளாக தெரியும். அவருடைய அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தால் வழக்கம் போல நான் சென்று பாடிவிட்டு வருவேன். அப்படித்தான் இந்த பாடலையும் பாட ஜிப்ரான் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. நான் சென்றபோது ஜிப்ரான் அங்கு இல்லை.

https://www.youtube.com/watch?v=6NZGv4B8Dng

சின்மயி பதிவு:

அவர் எப்படி பாட வேண்டும் என்று சொல்லி இருந்தாரோ, அப்படியே பாடிவிட்டு நான் வந்து விட்டேன். இப்போதுதான் நான் பாடியது திரௌபதி 2 படத்தில் தான் என்று தெரியவந்தது. இது என்னுடைய சித்தாந்தங்களுக்கு எதிரானது என்பதால் நான் பாடியே இருக்க மாட்டேன். மோகன் ஜி படம் என்றால் கண்டிப்பாக பாட ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படி சின்மயி பேசியிருந்தது சோசியல் மீடியாவில் மிக வைரலாகி இருக்கிறது. இதற்கு சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும், சிலர் மோகன் ஜிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மோகன் ஜி பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மோகன் ஜி, இப்போதுதான் படத்தோட முதல் பாடலை வெளியாகியிட்டு இருக்கோம். அதுக்குள்ள படத்தை காலி பண்ணனும் என்று பெரிய கூட்டமே இறங்கி வேலை செய்கிறது. இந்த உண்மையைச் சின்மயி வாயாலயே சொன்னாலே நல்லா இருக்கும். நான் சொன்னால் குற்றச்சாட்டு ஆகிவிடும். வலதுசாரி சித்தாந்தம் பற்றி படம் எடுத்தால் தாக்குதல் வரத்தான் செய்யும். அதெல்லாம் சமாளித்தால் தான் இந்த மோகன் ஜி மாதிரி நிற்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full