ஏன் அவர் கூட வேலை செய்யறீங்கன்னு பலர் கேட்டாங்க, ஆனால் - இயக்குனர் மோகன் ஜி ஓபன் டாக்

By subhashini · 13/1/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். ‘பழைய வண்ணார்பேட்டை’ என்ற படத்தின் மூலம் தான் மோகன் ஜி இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அதோடு இவர் சாதி ரீதியிலான படங்களை தான் எடுத்து வருகிறார் என்ற முத்திரையும் குத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் திரௌபதி 2. இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரக்ஷனா இந்துசூடன் திரௌபதி தேவியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

திரௌபதி 2

சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் இயக்குனர் மோகன் ஜி, ரிச்சர்ட் ரிசி, ஒய் ஜி மகேந்திரன், நட்டி நட்ராஜ் உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய இயக்குனர் மோகன் ஜி, இந்த படத்தினுடைய கதையை நிறைய தயாரிப்பாளர்களிடம் சொன்னேன்.

மோகன் ஜி பேட்டி:

ஹீரோவை மாற்றுங்கள் என்றார்கள். ஆனால், எனக்கு அவர்தான் ஹீரோ. இதில் நான் தெளிவாக இருந்தேன். விடாமல் நான் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று முயற்சித்தேன். கடைசியாக தான் நேதாஜி தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது. நிச்சயமாக இந்த படம் வெற்றி பெற்று ஒரு எடுத்துக்காட்டாக மாறும். திரௌபதி 2 படமானது 14ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை தலைநகரமாக கொண்ட ஆண்ட பேரரசர் வீரவல்லாளரை பற்றிய கதை.

https://www.youtube.com/watch?v=2bPuPibMbIc

படம் பற்றி சொன்னது:

நாம் இப்போது பயன்படுத்துகிற 'தோலை உரித்து தொங்க விடுவேன்' என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியதே இந்த அரசர் தான். இது போன்ற இன்னும் பல சுவாரசியமான வசனங்கள் இந்த படத்தில் இருக்கிறது. என்னுடன் வேலை செய்தவர்களை, ஏன் மோகன் ஜி படத்தில் நடிக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். இதனால் ரெண்டு பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்படி கேட்டவர்கள் யார் என்று சொல்ல விரும்பவில்லை. இந்த படம் மக்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full