மங்காத்தா படத்தால் திரௌபதி 2 இந்த நிலைமை வரும்ன்னு நினைக்கல - வேதனையில் மோகன் ஜி வெளியிட்ட வீடியோ
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இவர் சாதி ரீதியிலான படங்களை தான் எடுத்து வருகிறார் என்ற முத்திரையும் குத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் திரௌபதி 2. இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரக்ஷனா இந்துசூடன் திரௌபதி தேவியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் திரௌபதி 2 படம் வெளியானபோது மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் எல்லோருமே அஜித்தின் மங்காத்தா படத்தை தான் கொண்டாடி வருகிறார்கள். மங்காத்தா படத்தின் உடைய வசூல் நல்ல அளவில் குவித்து வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ள வீடியோவில், ஜனவரி 30 ஆம் தேதி தான் திரௌபதி 2 படத்தை வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம்.
திரௌபதி 2:
பொங்கலுக்கு ஜனநாயகன் படம் தள்ளி போனதால் தியேட்டர்கள் இருக்கும் என்று தேதியை நாங்கள் அறிவித்தோம். ஆனால், பொங்கலுக்கு கார்த்திக் சார் உடைய வா வாத்தியார் படம் வந்ததால் எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை. அதோடு திரௌபதி 2 படத்திற்காக பெரிய பெரிய ப்ரோமோஷன் எல்லாம் பண்ணோம் ப்ரோமோசனுக்கே நிறைய செலவு செய்து விட்டோம். அதனால் திரௌபதி 2 படத்தை நாங்கள் தள்ளி போடாமல் 23ஆம் தேதி வெளியிட்டோம். மங்காத்தா படம் வரக்கூடாது என்றெல்லாம் நினைத்தோம். பொங்கலுக்கு ரொம்ப எதிர்பார்ப்பு இருந்தது.
மோகன் ஜி வீடியோ:
மங்காத்தாவின் உடைய மிகப்பெரிய அலை கூட்டம், ரசிகர்களுடைய கொண்டாட்டத்தை ஒன்னும் செய்ய முடியவில்லை.
திரையரங்குகள் கிடைக்கவில்லை. காலை ஷோ, 9 மணி சோ எதுவுமே கிடைக்கவில்லை. கிடைத்த ஷோக்களிலுமே youtubeல் படம் பார்த்தவர்களிடம் கருத்து கேட்கவில்லை. மக்களிடம் வந்து சேர்க்கவில்லை.
எப்பவும் எனக்கு என்று ஒரு ஆடியன்ஸ் இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு இந்த படம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நினைத்தோம். ஆனால், அது முடியவில்லை. இதை பயன்படுத்தி பலர் என் மீது தவறான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். படம் பார்க்காமல் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
#திரெளபதி2 திரைப்படம் குறித்து, என் அன்பு மக்களிடம் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏 pic.twitter.com/YiXTyDmrjN
— Mohan G Kshatriyan (@mohandreamer) January 24, 2026
திரௌபதி 2 வசூல் சர்ச்சை:
இந்த சினிமா துறையில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனியாக 10 வருடங்களாக கடந்து வந்திருக்கிறேன்.
இந்த படத்திற்காக நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். சினிமாவில் இருந்து எந்த ஒரு இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் யாருமே எனக்கு ஒரு பதிவு போடவில்லை. மக்களை மட்டும் நம்பி தான் நான் இங்கு வந்து நிற்கிறேன். மக்கள் தீர்ப்பு மகேஷன் தீர்ப்பு. படம் பார்த்த மக்கள், பார்க்காத மக்களுக்கு சொல்லி புரிய வையுங்கள். கிராம மக்களுக்கு இந்த படம் தெரிய வேண்டும். என்னுடைய படம் ஓட வேண்டிய இடங்களில் கூட கலெக்ஷன் வரவில்லை. எனக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.