தன்னை விமர்சித்த தாமரை முதல் அருள் தாஸ் வரை - பெயர்களை குறிப்பிட்டு மன்னிப்பு கேட்ட மிஸ்கின்
மன்னிப்பு கேட்டு இயக்குனர் மிஸ்கின் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் மிஸ்கினின் சர்ச்சை பேச்சு தான் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இவர் சமீபகாலமாக மேடைகளில் பேசுவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
https://www.youtube.com/watch?v=Zjleo2i8FUA
அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் பாட்டில் ராதா படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது மிஸ்கின், மது அருந்துவது என்பது ஒரு நிலை. இங்கு உள்ளவர்கள் பெரும் குடிகாரர்கள் தான். இயக்குனர் குரோசாவா எனக்கு மிகப்பெரிய போதை. இயக்குனர் இளையராஜா என்ற ஒருத்தன் இருக்கான். அவன் தான் எனக்கு மிகப்பெரிய போதை என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். சோசியல் மீடியால் பலருமே மேடை நாகரீகம் இல்லாமல் மிஸ்கின் பேசி இருப்பது ரொம்ப தவறு என்று அவருடைய பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
மிஸ்கின் பேச்சு:
அந்த வகையில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ் பட விழாவில் மிஸ்கினை வெளுத்து வாங்கி இருந்தார். இவரை அடுத்து பல பிரபலங்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பட விழா ஒன்றில் மிஸ்கின் மன்னிப்பு கேட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர்,
பாடலாசிரியர் தாமரிடம் தான் மன்னிக்க மன்னிப்பு கேட்க நினைக்கிறேன். அவர் என்னை விமர்சித்து பேசி இருந்தார். வெற்றியால் தான் நான் அப்படி பேசி இருக்கிறேன் என்றெல்லாம் சொன்னார்.
பிரபலங்கள் கண்டனம்:
18 ஆண்டுகளாக நான் இந்த சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறேன். சகோதரி தாமரை, தினமும் 10 நிமிடம் உன் மரணத்தை பற்றி தியானி என்று பௌத்தம் சொல்வது போல் நான் தினமும் தியானித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வெற்றி என் தலை மீது இருந்திருந்தால் நான் பெரிய பெரிய ஆட்களோடு படம் செய்திருப்பேன். இரண்டாவதாக எனக்கு பிடித்த நண்பர் லெனின் பாரதியிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவர் என்னை தத்துவ ரீதியில் விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிஸ்கின் வீடியோ:
அவரை எடுத்து நடிகர் அருள்தாஸ் என்னை விமர்சித்து இருந்தார். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருடைய முகத்தில் அத்தனை கருணை இருக்கும். அவருடன் நான் ரொம்ப நாட்களாக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். கடந்த மூன்று நாட்களாக அவர் என்னை திட்டி திட்டி ரொம்ப பிரபலமாகிவிட்டார். அவரிடமும் என்னுடைய மன்னிப்பை கேட்கிறேன். அதேபோல் என்னை வைத்து படம் செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர் தாணு விடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதே போல் யாரோ ஒருவன் என் மீது செருப்பெறிய வேண்டும் என்று கூறியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=DvVeYBJXbR8
மிஸ்கின் மன்னிப்பு:
தயவுசெய்து ரெண்டு செருப்பாக எரியுங்கள். அதிலும் எட்டாம் நம்பர் பார்த்து எறியுங்கள். ஆழ் மனதில் இருந்து பேசிய போது ஒரு சில வார்த்தைகள் மேலே வந்து விட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டு அன்றைக்கு பேசவில்லை. விஷாலுக்கும் எனக்கும் பிரச்சனை வந்தபோது கூட அவர் என்னை அவ்வளவு மோசமாக விமர்சித்த பேசி இருந்தார். அப்போது கூட நான் அவரைப் பற்றி மேடையில் ஒரே ஒரு வார்த்தையை தவிர தவறாக பேசவே இல்லை. அன்று என் மனதில் ஆழத்திலிருந்து தான் நான் பேசி இருந்தேன். அது உங்களை புண்படுத்த செய்திருக்கிறது. என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் வெற்றிமாறனிடம் கேளுங்கள் என்று பேசி இருக்கிறார்.