சச்சின் ரீ ரிலீஸ்: படத்தை பார்த்து இயக்குனர் மிஸ்கின் கொடுத்த விமர்சனம் - என்ன சொல்லி இருக்காரு பாருங்க

By subhashini · 18/4/2025

விஜயின் சச்சின் படம் பற்றி இயக்குனர் மிஸ்கின் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் சச்சின்.

இந்த படத்தில் ஜெனிலியா, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தை ஜான் மகேந்திரன் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தானு தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.

சச்சின் ரீ ரிலீஸ்:

இதனால் இதை கொண்டாடும் விதமாக இந்த படத்தை உலகெங்கும் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு ரீ-ரீலீஸ் செய்திருக்கிறார். இந்த படத்தை நேற்று ஸ்பெஷல் பிரிமியர் ஷோ வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தை கண்டு ரசித்து இருக்கிறார்.
பின் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மிஸ்கின், இந்தப் படத்தை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.

மிஸ்கின் பேட்டி:

கல்லூரி காலத்திற்கு சென்றது போல் இருக்கிறது. டைம் டிராவல் பண்ணது போலவே இருந்தது. நான் 27 வருஷம் சினிமாவில் இருக்கிறேன். நான் சந்தித்த மிக ஆச்சரியமான மனிதர் தாணு. என்னை ஒரு மகன் போலவே பார்த்துக் கொண்டார். அவர்தான் சச்சின் படம் பார்க்க என்னை அழைத்தார். யூத் படத்தில் தான் என்னுடைய கேரியரை ஆரம்பித்தேன். சச்சின் படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. ரொம்ப ஜாலியான அழகான படம்.

https://www.youtube.com/watch?v=_RnkLtXbOd0&t=6s

சச்சின் படம் பற்றி சொன்னது:

நாம் லவ் பண்ணும் போது எப்படி குழந்தைத்தனமாக இருப்போமோ அந்த குழந்தை தனத்தை எல்லாம் வைத்து இந்த படம் எடுத்திருக்கிறார்கள். எனக்கு இந்த படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப பிடித்திருந்தது. இந்த படத்தில் விஜய் ரொம்பவே ஹான்சமாக இருக்கிறார். அவருடைய கேரியிலேயே அவர் ரொம்ப அழகாக காட்டிய படம் என்றால் இதுதான் என்று நினைக்கிறேன். மேலும், விஜய் சினிமாவை விட்டு போகவே மாட்டார்.

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)

விஜய் பற்றி சொன்னது:

அவர் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பார் என்று தான் நினைக்கிறேன். அவர் அரசியல் வேலைகளை பார்க்க வேண்டும். அதே நேரத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும். விஜய் போன்ற நடிகர்கள் எல்லாம் சினிமா வீட்டை போவது பெரிய இழப்பு. இவ்வளவு ரசிகர்களை சம்பாத்தித்து வைத்துள்ள விஜய் கலை துறையை விட்டுப் போகக்கூடாது. வருஷத்துக்கு ஒரு பாடமாவது விஜய் நடிக்க வேண்டும் என்று மிஸ்கின் கோரிக்கையும் வைத்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full