நான் சினிமாவில் இருந்து விலகப் போறேன், காரணம் இது தான் - இயக்குநர் மிஷ்கின் ஓபன் டாக்

By subhashini · 13/6/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ராம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சிறிய இடைவெளிக்கு பின் எடுத்து தற்போது ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பறந்து போ.

இந்த படத்தில் மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், ரேஸ் ஆண்டனி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஜூலை நான்காம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் பட குழுவினருடன்
சிறப்பு விருந்தினராக மிஷ்கினும் கலந்து கொண்டிருந்தார். அப்போது மிஷ்கின், சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் பிசாசு 2, ட்ரெயின் படங்களால் மிஷ்கின் முகவரியே இல்லாமல் போயிடுவார் என்று சொல்லியிருந்தார்.

பறந்து போ படம்:

அந்த நண்பரிடம் தாழ்மையாக ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். நானும் சீக்கிரமாகவே சினிமா விட்டு போகணும் தான் நினைக்கிறேன். நான் இப்போ சினிமாவில் மகிழ்ச்சியாக இல்லை. நான் மகிழ்ச்சியாக இருந்த காலமெல்லாம் போய்விட்டது. போட்டியும் இப்போ அதிகமாகிவிட்டது. வியாபாரமும் அலைக்கழிக்குது. உதிரம் சொட்ட சொட்ட தான் நான் சினிமாவில் இருந்துட்டு இருக்கேன். என்னை நிறைய சினிமா விழாக்களுக்கு அழைக்கிறார்கள். தயவுசெய்து என்னை கூப்பிடாதீர்கள்.

விழாவில் மிஸ்கின்:

அப்படி கூப்பிட்டால் ஒரு விழாவுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுங்கள். அதை வங்கியில் போட்டு வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். காரணம், அந்த பணத்தை வைத்து நான் என்னுடைய மகளை இன்னும் படிக்க வைக்கலாம் என்று நினைக்கிறன். இப்போ விமர்சகர்கள் பற்றி பல விஷயங்கள் பேசுகிறார்கள். ஒரு படம் நன்றாக இருந்தால் நல்லா இருக்கு என்று சொல்வார்கள். நல்லா இல்லை என்றால் அந்த படத்தை கிழித்து தொங்கவிடுவார்கள். அந்த உரிமை எல்லோருக்குமே இருக்கு.

https://www.youtube.com/watch?v=9_ZyUP7JIbQ

சினிமா பற்றி சொன்னது:

நல்லா இருக்கு என்று சொல்லும்போது நம்ம எல்லோரும் பெருமைப்படுகிறோம். ஆனால், நல்லா இல்லை என்று சொல்லும் போது மட்டும் கோபப்பட்டு திட்டுகிறோம். இந்த படத்தை பாருங்கள் நிச்சயமாக நல்லா இருக்கு என்று சொல்வீர்கள். நல்லா இல்லைனாலும் நல்லா இல்லை என்று சொல்லுங்கள். இயக்குனர் ராம் எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டார். அதேபோல் பலருமே நான் மேடையில் குடித்துவிட்டு பேசுவதாக சொல்கிறார்கள். நான் இரவு நேரத்தில் தான் குடிப்பேன். விழாக்களுக்கு குடித்துவிட்டு வரமாட்டேன் என்று வேடிக்கையாக பேசி இருக்கிறார்.

மிஸ்கின் திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். தற்போது இவர் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார். அதன் பின் இவர் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, யுத்தம் அதனைத் முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full