சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம் ‘ படம் குறித்து பிரபல இயக்குனர் ரஞ்சித் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. சூரரை போற்று என்று வெற்றிப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு Ott ரிலீஸ் மூலம் வந்திருக்கிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

பழங்குடியினர் உரிமைகளைப் பற்றிப் பேசும் பல படங்கள் வந்திருக்கு. அப்படி வெளியான படங்கள் எல்லாமே காடுகளில் வாழும் பழங்குடியினர் பத்தி தான் இருந்தது. ஆனால், முதல் முதலாக சமவெளியில் வாழ்ந்த பழங்குடியினர் பற்றி பேசின படமாக ஜெய் பீம் படம் அமைந்திருக்கிறது. பொதுமக்கள் மட்டுமில்லாமல் போலீஸ் கூட பழங்குடியினர் மக்கள் மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் சொல்லப்பட்ட பழங்குடியினர் கதை அப்படியே உண்மையாக நடந்த கதை தான்.

இதையும் பாருங்க : நான் அதை சொன்னவுடன் நீதிமன்றமே அழுது விட்டது – உண்மையான செங்கனியின் கண்ணீர் பேட்டி – இவங்க தானா அது.

Advertisement

இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அவ்வளவு ஏன் இந்த படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கூட மிகவும் உருவகமான அறிக்கையை வெளியிட்டு படக்குழுவையும் பாராட்டினார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் படக் குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ள ரஞ்சித்,  “சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே – இதோ மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதைபோல இனி பல கதைகள் வரும்.

அது நம் தலைமுறையை மாற்றும். ‘ஜெய் பீம்’ படத்தைக் கொடுத்த படக்குழுவிற்கு பெரும் நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஜெய் பீமிற்க்கும் ரஞ்சித்திற்கும் எப்போதும் ஒரு ஆழமான தொடர்பு இருந்து தான் வருகிறது. சொல்லப்போனால் ‘ஜெய் பீம்’ தலைப்பு வைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே ரஞ்சித் தான். ஏனென்றால் ரஞ்சித் தான் இந்த தலைப்பை விட்டுக் கொடுத்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் லைவ் பேட்டி ஒன்றில் பேசிய சூர்யா, இந்த தலைப்பு ஆரம்பத்தில் பா.ரஞ்சித் சாரிடம் தான் இருந்தது. அவரிடம் கேட்ட போது, இதுல என்ன சார் இருக்கு. ‘ஜெய் பீம்’ வார்த்தை அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதை தாராளமா நீங்க பயன்படுத்திக்கலாம் அப்படின்னு சொன்னாரு.எங்களுக்காக ‘ஜெய் பீம்’ டைட்டிலை அவர் விட்டு கொடுத்ததுக்கு எங்க மொத்த டீமும் அவருக்கு நன்றி சொல்லணும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement