மனதை கொத்தித் திண்ணும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா - நடிகர் பார்த்திபன் ஆவேசம்
தன்னை பற்றி பரவிய வதந்திக்கு நடிகர் பார்த்திபன் முற்றுப்புள்ளி வைத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமா துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.
அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர். அந்த வகையில் பார்த்திபன் இயக்கி நடித்து இருந்த ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து கடைசியாக பார்த்திபன் நடித்த படம் ‘டீன்ஸ்’. ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர். மூடநம்பிக்கை, அறிவியல் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார்.
பார்த்திபன் குறித்த தகவல்:
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் 54 ஆம் பக்கத்தில் மயிலிறகு, நான் தான் சிஎம் போன்ற படங்களை எல்லாம் இயக்கி நடிக்கிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகிவிட்டது. அது மட்டும் இல்லாமல் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இட்லி கடை என்ற படத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.
பார்த்திபன் பதிவு:
இதை அடுத்து பார்த்திபன் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பார்த்திபன் இறந்து விட்டதாக யூடியூபில் போலியான செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாய்க்கர் பார்த்திபன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும்.
இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் …. மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்மந்தப் பட்டவர்களின் குடும்பம்>>> அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும். இது பல முறை, என்னை… pic.twitter.com/FiTpCkvh3o
— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 23, 2025
வதந்திக்கு முற்றுப்புள்ளி:
இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும், மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்மந்தப் பட்டவர்களின் குடும்பம்>>> அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும். இது பல முறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கிக் கொடுத் திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும் என்று கூறி இருக்கிறார்.