பெண் சம்மதிக்காமல் ஆண் தொட முடியாது - கோலிவுட் நிலை பற்றி இயக்குனர் பேரரசு ஆவேசம்
சினிமா மீதான நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இயக்குனர் பேரரசு கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் பேய் கொட்டு. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், எடிட்டிங், உட்பட 31 துறைகளிலும் அவரே வேலை செய்து
மிகப் பெரிய சாதனையும் செய்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படம் தொடர்பான நிகழ்வு சென்னையில் நடைபெற்று இருந்தது.
https://www.youtube.com/watch?v=JrJNrWPfi3c
இதில் சிறப்பு விருந்தினர் விருந்தினராக இயக்குனர் பேரரசு கலந்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் இயக்குனர் லாவண்யா பேசியது, திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நிறைய நடக்கிறது என்று பல விஷயங்களை பேசி இருந்தார். இவரை அடுத்து பேசிய இயக்குனர் பேரரசு, சினிமாவிற்கு சென்றால் நிறைய விஷயங்களை அனுபவிக்கலாம் என்று நினைப்பவர்கள், சினிமாவை தவறாக பார்ப்பவர்கள் ஆகியோர் தான் சினிமாவில் பெண்களின் மீது கை வைப்பார்கள்.
நிகழ்ச்சியில் பேரரசு:
சினிமாவை தெய்வமாக பாவிப்பவன் நிச்சயமாக இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டான்.
சினிமாவில் நடிக்க வருபவர்கள் தவறான நபரை தொடர்பு கொண்டு, தவறான இடத்திற்கு செல்லும் போது தான் தவறுகள் நிறைய நடக்கிறது. அதை ஒரு பெண் சொல்லும் பொழுது ஒட்டுமொத்த சினிமா உலகம் இப்படி தானோ என்று எண்ணமும் வருகிறது. ஆனால், உண்மை நிலை அப்படி கிடையாது. இன்றும் மகள் தந்தையாய் பழகக்கூடிய நடிகையும் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சினிமா குறித்து சொன்னது:
நடிகையை வளர்த்து விட்டு அழகு பார்க்கும் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். தற்போது நடிக்க வரக்கூடிய பெண்களுக்கு நிறைய படிப்பறிவு, தைரியம் இருக்கிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்ளக்கூடிய பக்குவமும் அவர்களிடம் இருக்கிறது. அந்த காலம் போல இந்த காலம் இல்லை. ஒரு பெண் சம்மதம் இல்லாமல் ஒரு ஆண் அவரை நிச்சயமாக தொடவே முடியாது. அவள் அந்த நபரை உண்டு இல்லை என்று செய்துவிடுவாள். ஆனால், நடிக்க வரும் பெண்களிடம் விழிப்புணர்வு கொஞ்சம் அதிகமாகவே வர வேண்டும்.
https://www.youtube.com/watch?v=-BixQslU67M
பெண்கள் நிலை பற்றி சொன்னது:
இந்த துறைகளுக்கெல்லாம் நிச்சயம் நிறைய சாதிக்க வேண்டும் என்றால் நீங்கள் சரியான நபரிடம் சென்று சேர வேண்டும். சினிமாவில் இருந்து தான் பல முதலமைச்சர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். கலைஞர் சினிமாவில் இருந்து தான் வந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும் சினிமாவில் இருந்து தான் வந்தார்கள். சினிமா ஒரு சக்தி வாய்ந்த மீடியா என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் பேரரசு.
பேரரசு குறித்த தகவல்:
இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படமாக இருக்கும். அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் எடுத்த சிவகாசி, திருப்பாச்சி போன்றவை பெரிய வெற்றிடங்கள் என்று கூறலாம். சமீப காலமாக இவர் படங்களை இயக்குவது இல்லை.