நீங்கள் இந்தி படிக்காததால் - இயக்குனர் பேரரசு அதிரடி கருத்து.

By Rajkumar · 8/9/2020

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது.

https://twitter.com/ARASUPERARASU/status/1303035316194873344

சமீபத்தில் கூட தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் கூட #இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் கூட கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரெண்டிங்கில் வந்தது.

திமுக போன்ற பல்வேறு கட்சியினர் இந்த இந்தி எதிர்ப்பு பிரச்சனையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் கூட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து இயக்குனர் பேரரசு தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், நீங்கள் இந்தி படிக்காததால் இந்தி அழிந்துவிடப் போவதில்லை! உங்கள் சந்ததி தமிழ் படிக்கவில்லை என்றால் தமிழ் அழிந்துவிடும்! உங்களுக்கு உண்மையான தமிழ்ப்பற்று உண்டென்றால் தனியார் பள்ளிகளில் கட்டாய தமிழ்ப் பாடத்திற்கு போராடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். பேரரசுவின் இந்த கருத்திற்கு பல்வேறு ஆதரவுகள் குவிந்து வருகின்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full