Tik Tok -கினால் மகளுடன் மன கஷ்டம். இயக்குனர் பிரபு சாலமன் ஓபன் பேட்டி.

By Rajkumar · 16/8/2020

சமூக வளைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள். அதிலும் டிக் டாக் செயலி வந்த பின்னர் அதிலிருந்து பல்வேறு நபர்கள் சினிமாவில் வாய்ப்பை தேடிக்கொண்டு உள்ளார்கள். அவ்வளவு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்த்ரஜா கூட டிக் டாக் மூலம் தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பையே பெற்றார். அந்த வகையில் பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலை டிக் டாக் செய்து பிரபலமடைந்தவர் ஹேசல் ஷைனி.

https://www.youtube.com/watch?v=TTPXJJvwhy8

ஹேசல் ஷைனி சமூக ஊடக தளமான டிக் டோக்கில் பிரபலமானவர். இவர் பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் என்பதே பலருக்கும் பின்னர் தான் தெரியவந்தது.டிக் டோக்கில் 14 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டு இருந்தனர். டிக் டோக் மூலம் கிடைத்த பிரபலத்தால் இவருக்கு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிற தளங்களில் அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றத்தந்தது.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பிரபு சாலமன் மகள் என்பதால், ஹேசல் ஷைனி இன்ஸ்டாகிராமிலும் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் டிக் டோக் விடீயோக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார். டிக் டாக் தடை செய்யப்பட்ட போது கூட தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஹேசல் ஷைனி.

https://www.youtube.com/watch?v=QmVuTI8PbdE&t=1064s

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபு சாலமன், தனது மகள் இப்படி செய்வது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை, நான் ஆன்மீக அடிப்படையில் வாழ்க்கையை வாழும் ஆள். அவர் என்னிடம் கேட்கவில்லை. இருப்பினும் நான் ஒரு அப்பாவாக அவருக்கு இதெல்லாம் வேண்டாம் என்று அறிவுரை சொன்னேன். இருப்பினும் அவர் இவ்வளவு பிரபலமாவார்கள் என்று அவரே நினையவில்லை என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full