'ஏ ஆர் ரகுமானால் தான் என் கேரியரே போச்சு' மனவேதனையில் பிரவீன் காந்தி சொன்ன தகவல்

By subhashini · 21/7/2024

ஏ ஆர் ரகுமானால் தான் என் வாழ்க்கையே போச்சு என்று பிரவீன் காந்தி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்டவர் பிரவீன் காந்தி. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் முதலில் இயக்குனர் பிரியதர்ஷன் இடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

அதற்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு வெளிவந்த 'ரட்சகன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். நாகர்ஜுனா, சுஷ்மிதா சென் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தினுடைய பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் வருகிறது.

பிரவீன் காந்தி திரைப்பயணம்:

இதைத் தொடர்ந்து இவர் சிம்ரன்- பிரசாந்த் இணைந்து நடித்த 'ஜோடி' என்ற படத்தை கொடுத்திருந்தார். அதற்கு பின் 'ஸ்டார்' என்ற படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரவீன் காந்தி அவர்கள் 'துள்ளல்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தப் படமும் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. சமீப காலமாக இவர் படங்களை இயக்குவதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

பிரவீன் காந்தி பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரவீன் காந்தி, என்னுடைய படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்து இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கென்று வெறித்தனமான ரசிகர்கள் இருந்தார்கள். ரகுமான் சின்ன வயதிலேயே மிகப்பெரிய சாதனைகளை செய்தவர். அவருடைய குணம் பலருக்கு ஆச்சரியத்தை தரும். சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய வேலை என்னவோ அதை மட்டுமே செய்வார்.

ஏ ஆர் ரகுமான் குறித்து சொன்னது:

நான் சினிமாவில் நிச்சயம் ஏதோ சாதிப்பேன் என்று தெரியும். காரணம் அவ்வளவு கடுமையான உழைப்பு என்னிடம் இருந்தது. அப்படி சுறுசுறுப்பாக வேலை செய்வேன். என்னை அனைவரும் ஃபயர் பாய் என்று தான் அழைப்பார்கள். அந்தளவிற்கு உழைப்பை கொடுத்தேன். அப்போதைய காலகட்டத்திலேயே ரட்சகன் படத்தில் பான் இந்தியா திரைப்படத்திற்கான அனைத்து விஷயமும் இருந்தது. ஆனால், ரட்சகன் படத்திற்கு ஹிந்தி ரைட்ஸ் கேட்டும் ஏ ஆர் ரகுமான் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.

ரட்சகன் 2 கதை:

அதை மட்டும் அவர் கொடுத்திருந்தால் ஹிந்தியில் பெரிய இயக்குனராக நான் இருந்திருப்பேன். ரட்சகன் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான கதை தயாராக இருக்கிறது. கடந்த இரண்டு வருடமாக இதற்கான கதையை தான் எழுதி வைத்து வருகிறேன். சமீபத்தில் கூட நாகார்ஜுனா இடம் ரசிகர்கள் ரட்சகன் இரண்டாம் பாகம் குறித்து கேட்டிருந்தார்கள். அதற்கு இது நம் ஆசை மட்டுமல்ல ரசிகர்களுடைய ஆசையும் என்று கூறியிருந்தார். இந்த காலத்து இளைஞர்களுக்கு அதிரடியான ஆக்ஷன் படம்தான் ரொம்ப பிடிக்கும். அதுபோல ஒரு படத்தை பண்ணால் நல்ல ரீச் கிடைக்கும் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் இது குறித்து நாகர்ஜுனா சந்தித்து பேச இருக்கிறேன் என்று கூறி வந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full