'இனி அவர் ரஞ்சித் இல்லங்க செஞ்சித் ' ரஞ்சித்தை வச்சு செஞ்ச இயக்குனர் பிரவீன் காந்தி

By subhashini · 12/8/2024

நடிகர் ரஞ்சித்தின் கவுண்டபாளையம் படம் குறித்து இயக்குனர் பிரவீன் காந்தி கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரஞ்சித். பின் இடையில் இவர் சிறிய இடைவெளி எடுத்து கொண்டு சீரியலில் நடிக்க துவங்கினார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும், நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் ‘குழந்தை C/O கவுண்டம் பாளையம்’. நாடக காதலை மையமாக வைத்து இந்த படத்தை நடிகர் ரஞ்சித் எடுத்து இருக்கிறார்.
இந்த படத்தினுடைய ட்ரைலர் வெளியாகியதிலிருந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாகவே நடிகர் ரஞ்சித்தின் கவுண்டபாளையம் படம் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

குழந்தை C/O கவுண்டம் பாளையம்:

அதோடு நடிகர் ரஞ்சித் அவர்கள் மறைமுகமாக வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களை தாக்கி பேசியிருக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. மேலும், பல சர்ச்சைகளுக்கு பிறகு ஆகஸ்ட் 9ம் தேதி கவுண்டபாளையம் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய படத்திற்கு திரையரங்கள் கிடைக்காமல் இருக்கிறது என்றும், இதற்கு காரணம், என் மீது வைத்திருக்கும் வன்மம் தான் என்றெல்லாம் ரஞ்சித் குற்றம் சாட்டி இருந்தார்.

இயக்குனர் பிரவீன் காந்தி சொன்னது:

இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் காந்தி அவர்கள் கவுண்டம்பாளையம் படத்தை பார்த்து, கவுண்டம்பாளையம் படத்தின் மூலம் நாடகக் காதலைப் பற்றி ரஞ்சித் பேசி இருக்கிறார். இதனால் இனி அவர் ரஞ்சித் இல்ல, செஞ்சித். காரணம், இந்த திரைப்படத்தில் அவர் அப்படி நாடக் காதலை வைத்து செய்திருக்கிறார் என்று கூறி மீண்டும் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ரஞ்சித் பேட்டி:

ஏற்கனவே படத்தினுடைய முதல் காட்சி பார்த்துவிட்டு நடிகர் ரஞ்சித், என்னுடைய படத்திற்கு எந்த ஒரு ஜாதி பெயரையும் வைக்கவில்லை. கவுண்டம்பாளையம் என்பது ஒரு சட்டமன்ற தொகுதி. அது ஒரு ஊருடைய பெயர். பார்வையாளர்கள் உடைய கண்ணோட்டம் தான் அப்படி இருக்கிறது. என் மீது பழி சுமத்த வேண்டும் என்று தேவையில்லாத சிலர் செய்யும் வேலை இது. இந்தப் படத்தில் ஆணவ படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது என்பதை தான் சொல்லியிருக்கிறேன். பிள்ளைகள் மீது வரும் அக்கறையோட வெளிப்பாடு தான் இது என்று கூறியிருந்தார்.

ஆணவக்கொலை குறித்த சர்ச்சை:

இப்படி நடிகர் ரஞ்சித் கூறி இருந்ததற்கு பலரும், இவர் ஆணவ படுகொலைக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று மோசமாக விமர்சித்து பேசி இருந்தார்கள். பின் இது தொடர்பாக ரஞ்சித், நான் சொன்ன கருத்தை வேறு மாதிரியாக திரித்து சொல்கிறார்கள். என் மீது எதற்கு இவ்வளவு வன்மம்? தயவுசெய்து என் மீது வன்மத்தை கொட்டுவதை நிறுத்துங்கள். யாராவது ஆணவ கொலைக்கு ஆதரவு கொடுப்பார்களா? நான் கொடுக்க மாட்டேன். நான் ஆணவ கொலைக்கு ஆதரவாக இல்லை. நான் எந்த இடத்திலுமே ஆணவ கொலைக்கு ஆதரவானவர் என்று சொல்லவில்லை என்று பேசி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full