ஒரு படம் பிரபலம் ஆகணும்ன்னா பணம் கொடுக்கணும், ஆனால் - இயக்குனர் பிரேம் குமார் ஆதங்கம்
எதிர்மறை விமர்சனங்கள் பற்றி இயக்குனர் பிரேம்குமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக பிரேம்குமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டை பெற்று தந்திருந்தது.
அதற்குப்பின் கடந்த ஆண்டு கார்த்தி- அரவிந்த்சாமி கூட்டணியில் வெளியாகி இருந்த மெய்யழகன் என்ற படத்தை பிரேம்குமார் இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையுமே செய்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இவர் 96 படத்தின் உடைய இரண்டாம் பாகம், இன்னும் வேறொரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். இவருடைய படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நிகழ்ச்சியில் பிரேம்குமார்:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் பிரேம்குமார் அவர்கள் எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர், தமிழ் சினிமாவில் நெகட்டிவ் விமர்சனங்கள் தற்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இப்போது அதிகமாகி கொண்டே செல்கிறது. தற்போது பல விமர்சகர்கள் இருக்கிறார்கள். நான் அனைத்து விமர்சனங்களையும் குறை சொல்லவில்லை.
பாசிட்டிவ் விமர்சனம்:
சில விமர்சகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்கள் பேசும் தோனி என அனைத்துமே நெகட்டிவாக இருக்கிறது. படம் வெளியான பிறகு முதல் வாரத்தை அவர்கள் இலக்காக கொள்கிறார்கள். அவர்கள் ஒரு அஜெண்டாவை வைத்து இதையெல்லாம் செய்கிறார்கள். ஒரு படம் வெளியான முதல் வாரத்தில் படத்திற்கு வசூல் வந்து விட்டால் தயாரிப்பாளர் தானாகவே அவருடைய அடுத்த படத்தை உங்களுக்கு கொடுப்பார்.
நெகட்டிவ் விமர்சனம்:
பணம் பெற்றுக் கொண்டு விமர்சனம் செய்வது இப்போது 90 சதவீதத்திற்கும் அதிகமாகிவிட்டது. பாசிட்டிவ் விமர்சகர்கள் ரொம்பவே குறைவாக இருக்கிறார்கள். பாசிட்டிவ் விமர்சகர்களிடம் ஒரு படத்தை சரியாக விமர்சனம் செய்வதற்கு போதுமான திறமைகள் இல்லை. ஓரிரு நபர்களால் மட்டுமே நல்ல விமர்சனங்களை கொடுக்க முடிகிறது. அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களே இருக்கிறார்கள்.
பிரேம்குமார் கோரிக்கை:
மீதம் இருப்பவர்கள் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் படத்தில் பார்க்கிறார்கள். இப்படியான விமர்சனங்களை வைத்து திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்க்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்கிறார்கள். இந்த பிரச்சனையை பரிசீலனை செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து சில விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் சினிமா வளரும் என்று கூறி இருக்கிறார்.