குடியிருந்த வீடு ஏலத்திற்கு வர இருப்பதை அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல் கண் கலங்கியபடி நடிகர், இயக்குனர் ராஜசேகரின் மனைவி தாரா அளித்திருப்போம் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவர் ராஜசேகர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருந்தார். பின் இவர் சின்னத்திரையில் நடிகராகவும் நடித்து இருந்தார். இதனிடையே இவர் தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் நடிகர் ராஜசேகர் அவர்கள் 2019 செப்டம்பர் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். தான் இறப்பதற்குள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான் இவரின் கடைசி ஆசையாம்.

இதனால் அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு பிளாட்டை வாங்கினார். ஆனால், அந்த வீட்டில் குடியேறாமலேயே ராஜசேகர் இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் மட்டுமே சில மணி நேரம் அந்த வீட்டில் வைக்கப்பட்டு எடுத்து சென்றது. தற்போது உறவுகளின் ஆதரவு இல்லாத நிலையில் தனி மனுஷியாக இருக்கிறார் தாரா. இந்நிலையில் ராஜசேகரின் மனைவி தாரா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, ஒளிப்பதிவாளராக தான் என்னுடைய கணவர் சினிமாவுக்குள் நுழைந்தார். அதன் பிறகு சில படங்களை இயக்கினார். பின் நடிகராகவும் ஆனார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் சம்பாதித்த மொத்த பணத்தையும் குடும்பத்துக்காக செலவு செய்து விட்டார். அவருடைய தங்கைகளுக்கெல்லாம் நிறைய நகைகளை போட்டு திருமணம் செய்து வைத்தார்.

Advertisement

தாரா அளித்த பேட்டி:

தனக்கு என்று ஒரு ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. பின் அவர் நடிகை சரண்யாவை தான் முதலில் திருமணம் செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகு இரண்டாவது ஆக தான் அவர் என்னை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் இருந்த போது அவர் பணத்தை சேர்த்து வைக்கவில்லை. சினிமாவில் இருந்து ஓய்வு கொடுத்த சமயத்தில் தான் தனக்கென்று சொந்த வீடு கூட இல்லாமல், பணம் இல்லாமல் இருந்ததை நினைத்து அவர் வருத்தப்பட்டார். அப்பத்தான் அவர் என்னை நினைத்து பயந்தார். ஒரு நாள் திடீரென்று எனக்கு ஏதாவது ஆனால் உன் நிலைமை என்ன ஆகும்? என்று புலம்பினார். காலம் கடந்த பின்னாடி அவர் புலம்பி என்ன ஆகப்போகுது? விடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

ராஜசேகர் குறித்து சொன்னது:

பின் அவர் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து அதில் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு வங்கியில் கொஞ்சம் கடன் வாங்கி வடபழனியில் ஒரு பிளாட்டை வாங்கினார். ஆனால், அந்த வீட்டுக்கு பால் காய்த்து செல்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். இறந்த அவரின் உடலை தான் அந்த வீட்டில் கொஞ்ச நேரம் வைத்து இருந்தோம். அவர் இறந்த இரண்டாவது மாதத்திலேயே வங்கியில் இருந்து வந்து விட்டார்கள். மீதி கடனை எப்படி கட்டுவீங்க? என்று கேள்வி கேட்டு என்னை தொல்லை செய்தார்கள். பின் நான் அங்கங்க கிடைத்த பணத்தை வைத்து வங்கியில் கட்டினேன் வீட்டின். மொத்த மதிப்பு 60 லட்சம். ஆரம்பத்தில் 30 லட்சம் ரூபாய் கட்டினோம். இதுவரை 35 லட்சத்துக்கு மேல கட்டி விட்டோம். மீதி பணத்துக்கு நான் எங்கே போவேன் என்று தெரியவில்லை. எனக்கு வயதாகி விட்டது. இனி என் சாப்பாட்டுக்கே என்ன பண்ணுவது? என்று தெரியாத சூழ்நிலை.

Advertisement

தாராவின் தற்போதைய நிலை:

அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு நிலையில் அந்த வீட்டை ஏலத்துக்கு விடுவதை விட வேற வழி இல்லை என்று வங்கியில் சொல்லிவிட்டார்கள். நடிகர்கள், இயக்குனர்கள், சின்னத்திரை நடிகர் சங்கம் என்று எல்லா சங்கத்திலும் என்னுடைய கணவர் ராஜசேகர் உறுப்பினராக இருந்தார். அதனால் நானும் பல இடங்களில் உதவி கேட்டுப் போனேன். எதுவுமே நடக்கவில்லை. யாரும் உதவி செய்யவில்லை. என்னுடன் நிலைமையை விளக்கி முதலமைச்சருக்கு மனு கொடுத்தேன். ஆனாலும், இந்த தேதி வரை எந்த ஒரு பதிலும் எனக்கு கிடைக்கவில்லை. இரண்டு நாளைக்கு முன்னாடி தான் வங்கியில் இருந்து பேசினார்கள்.

Advertisement

தாரா வைத்த கோரிக்கை:

அந்த வீட்டை ஏலத்தில் எடுக்க வங்கி அசோசியேனிலிருந்து ஒருவர் வந்திருக்கிறார். அதனால் நீங்க முறைப்படி வீட்டை காலி செய்து தந்து விடுங்கள் இல்லை என்றால் போலீசை கொண்டு வந்து வெளியே ஏற்ற வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார்கள். என்னுடைய கணவர் பயந்தது போலவே நடந்து விட்டது. எந்த நேரத்திலும் என்னை வீட்டை விட்டு வெளியில் தள்ளி நடுரோட்டில் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். என்னுடைய கடைசி வேண்டுகோளாக சினிமாவில் இருப்பவர்களுக்கும், முதலமைச்சருக்கும் கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறேன். இந்த பிரச்சனையிலிருந்து என்னை மீட்டு இன்னும் இருக்கிற சில நாட்களில் என்னை நிம்மதியாக வாழ வைக்க உதவி செய்யுங்கள் என்று கண்ணீருடன் கூறியிருந்தார்.

Advertisement