இதற்கு இரண்டு தசாப்தங்கள், இரண்டு படங்கள் தேவைப்பட்டது - மணிரத்னம் பற்றி அமரன் பட இயக்குனர் சொன்ன விஷயம்
இயக்குனர் மணிரத்தினம் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். சினிமாவில் வருவதற்கு முன்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பணியாற்றி இருந்தார்.
அதன்பின்பு இவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார். அந்த வகையில் இவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த துப்பாக்கி படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இவர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்தியை வைத்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ரங்கூன் என்ற படத்தின் மூலம் இவர் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார்.
ராஜ்குமார் பெரியசாமி குறித்த தகவல்:
இதை அடுத்து இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அமரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது.
அமரன் படம்:
அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.
பிரபலங்கள் பாராட்டு:
இந்த படத்தை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படத்துக்கு பல்வேறு மேடைகளில் அங்கீகாரமும் விருதுகளுமே கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதை எடுத்து தற்போது இயக்குனர் பெரியசாமி அவர்கள் பல படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது.
ராஜ்குமார் பெரியசாமி பதிவு:
அந்த வகையில் இவர் நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பாலிவுட்டிலும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் மணிரத்னத்தை சந்தித்தது தொடர்பாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அமரன் திரைப்படத்தின் நூறாவது நாளை நோக்கி, சினிமா குறித்து கனவு காண்பதற்கு முக்கிய காரணம் நீங்கள் தான் மணி சார். நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என நினைத்த முதல் நபர் நீங்கள் தான்.
Towards #100DaysOfAmaran
— Rajkumar Periasamy (@Rajkumar_KP) February 4, 2025
Mani sir, you were the reason for me to dream about films and be fascinated with filmmaking; you were the first person I ever wanted to take a picture with and took it in 2005! To my heartbreak, I lost it as well.
Took me two decades and two films to… pic.twitter.com/la6kNmWcF1
சினிமாவுக்கு வர காரணம்:
அந்த புகைப்படத்தை 2005-ல் எடுத்து இருந்தேன். ஆனால், அந்த புகைப்படத்தை நான் தொலைத்து விட்டேன்.
உங்களுடன் இந்த இரண்டு புகைப்படங்களை எடுப்பதற்கு தைரியத்தை வரவழைக்க எனக்கு இரண்டு தசாப்தங்கள் & இரண்டு திரைப்படங்கள் ஆகிவிட்டது. உங்களின் திரைப்பட போஸ்டர்களை பார்த்து வியந்து நின்றவன், இன்று உங்கள் அருகில் இருக்கிறேன். அதுவும் பேச்சற்று இருக்கிறேன். அமரன் திரைப்படம் குறித்து நீங்கள் பாராட்டியதற்கு ரொம்ப நன்றி சார் என்று குறிப்பிடுகிறார்.