'மை லார்ட்' படம் எடுக்க துணிச்சல் வேண்டும், காரணம் - இயக்குனர் ராம் வெளியிட்ட வீடியோ

By subhashini · 21/2/2026

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் சசிகுமார் நடித்த நந்தன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.
இந்த படங்கள் சசிகுமாருக்கு ஒரு நல்ல பெயரையும் வாங்கி தந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

மை லார்ட் படம்:

தற்போது சசிகுமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மை லார்ட். இந்த படத்தை இயக்குனர் ராஜூ முருகன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சைத்ரா அச்சர், குரு சோமசுந்தரம், ஆசா சரத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

https://www.youtube.com/shorts/QaOi6HxZp4M

இயக்குனர் ராம் வீடியோ:

இந்நிலையில் இந்த படத்தை பாராட்டி இயக்குனர் ராம் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் இயக்குனர் ராம், தமிழ் சினிமாவில் முந்தைய படங்களின் கதையிலிருந்து வழக்கமான கதையிலிருந்து மாறுபட்டு வேறு ஒரு கதையை எடுக்க துணிச்சல் வேண்டும். நமக்கு பரீட்சயம் இல்லாத நடிகர்களை அறிமுகப்படுத்தவும் துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் இயக்குனர் ராஜூ முருகனுக்கு நிறையவே இருக்கிறது. அவரின் இன்னொரு துணிச்சலான படைப்புதான் மை லார்ட்.

படம் பற்றி சொன்னது:

அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் அதிகார உச்சத்திலிருந்து விலகி விளிம்பு நிலையில் பாதாளத்தில் உள்ள இருவருக்கும் நடைபெறும் கதை தான் மை லார்ட். சமூகத்தினுடைய இரண்டு முனைகளையும் தைரியமாக சொல்லும் ஒரு துணிச்சலான படைப்பு. மானுட அரசியலை இந்த படம் பேசி இருக்கிறது. அயோத்தி படத்திற்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளில் பெரிய மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறார். அந்த மாற்றம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் அவரை ஒரு உறுப்பினராக இணைத்து இருக்கிறது. என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full