என் படத்தை பார்த்துவிட்டு முதல்முறையாக சிரிச்சுட்டே வெளியே வருகிறார்கள் - நெகிழ்ச்சியில் இயக்குநர் ராம்

By subhashini · 5/7/2025

பறந்து போ படத்தின் ரிலீஸ்க்கு பின் இயக்குனர் ராம் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ராம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பறந்து போ. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஷ் ஆண்டனி, மிதுல் ராயன், அஞ்சலி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்கள்.

மேலும், யுவன் சங்கர் ராஜா தான் படம் முழுக்க இசையமைப்பதாக இருந்தது. ஆனால், யுவன் அந்த சமயத்தில் வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் பின்னணி இசையை மட்டும் அமைத்திருந்தார். பாடல்களை சந்தோஷ் தயாநிதி அமைந்திருக்கிறார். அப்பா-மகன் இடையே இருக்கும் பாசம், மிடில் கிளாஸ் வாழ்க்கை என்று அழகாக இயக்குனர் கதையை கொண்டு சென்றிருக்கிறார். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இயக்குனர் ராம் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் வெளிவந்த பிறகு அளித்த பேட்டியில் இயக்குனர் ராம், எல்லோரும் சிரிக்கிற மாதிரி இந்த படம் எடுத்திருக்கிறேன். யாரும் சிரிக்கவில்லை என்றால் என்ன பண்ணுவது என்ற பயம் இருந்தது. ஆனால், படம் பார்த்தவர்கள் சிரிப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு முன்னாடி ரொம்ப சீரியசான படம் தான் கொடுத்தேன். முதல் முறை என் படத்தை பார்த்து சிரித்துக் கொண்டே வெளியே வருகிறார்கள். அதை பார்க்கும்போது எனக்கு சந்தோசமாக இருக்கிறது.

சிவா பற்றி சொன்னது:

இந்த படத்தின் கதைக்கு மிர்ச்சி சிவா ரொம்பவே பொருத்தமாக இருக்கிறார். அவருடைய படங்களிலேயே இந்த படம் முக்கியமான படம் என்று பாராட்டுக்கள் கிடைக்கும் என நினைக்கிறேன். அவர் அகில உலக சூப்பர் ஸ்டார் தான். ஒரு குக்கிராமத்தில் படம் எடுக்கும்போது சிவாவை பார்க்க 4000 பேர் வந்தார்கள். அந்த அளவிற்கு கிராமங்கள் வரை பிரபலமாக இருக்கிறார். அவருடைய காமெடியும், எளிமையான பேச்சும் மக்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இந்த படத்தில் நல்ல அப்பாவாகவும் அவரை எல்லோருக்கும் இனி மேல் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ சிவா அவர்கள் சென்னை சிட்லபாக்கம் ஏரியாவில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி தான் கிரேஸ் ஆண்டனி. இவர்களுக்கு மிதுல் ராயன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இருவருமே காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள். தன்னுடைய மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் சிவா. அதற்காகவே இவர் இஎம்ஐ வீடு, பைக் என்று எல்லாமே வாங்கி வைத்திருக்கிறார். அதோடு கடனை கட்ட முடியாமலும் ரொம்ப கஷ்டப்படுகிறார் சிவா. இவருடைய மனைவி கிரேஸ், சேலை வியாபாரம் செய்கிறார்.

இப்படி இருக்கும் போது ஒருநாள் கோயம்புத்தூரில் சேலை வியாபாரம் செய்ய கிரேஸ் ஆண்டனி செல்கிறார்.
பின் மிர்ச்சி சிவா தான் தன்னுடைய மகனை கவனமாக பார்த்துக் கொள்கிறார். அப்போது மிர்ச்சி சிவாவின் மகன் பைக்கில் ஊர் சுற்ற வேண்டும் என்று ரொம்பவே அடம் பிடிக்கிறார். இதனால் சிவாவுமே தன்னுடைய மகனை அலைத்துக்கொண்டு பைக் டிராவல் செய்கிறார். அப்படி செல்லும்போது சிவா, தன் பள்ளி தோழி அஞ்சலியை சந்திக்கிறார். மகன்- தந்தை இருவருமே பைக் டிராவல் செய்யும்போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களும், இருவருக்கும் இடையேயான புரிதலும் தான் படத்தினுடைய மீதி கதை.

behindtalkies AMP · Quick view
View full