எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டைன்னு சொல்றாங்க, ஆனால் - இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி சொன்ன விஷயம்

By subhashini · 10/3/2026

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக இருக்கிறார். இந்த படத்தில் சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் சுப்பிரமணியம், உட்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ்க்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படுகிறது.

கருப்பு படம்:

அதற்கு காரணம் ஆர்.ஜே பாலாஜிக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே சண்டை என்றும் இந்த படம் வெளியாக நிறைய சிக்கல் இருப்பதாகவும் பேசப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கருப்பு திரைப்படம் தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி, உங்களுடைய அன்புக்கு ரொம்ப நன்றி. இரண்டு வருடம் கழித்து கிரிக்கெட் வர்ணனைனுக்கு இப்போதுதான் வெளியில் வருகிறேன். மீண்டும் இந்த வேலைக்கு வந்ததற்கு லவ் கொடுத்து இருக்கிறீர்கள். கருப்பு படத்தோட வேலைகளையும் மறுபடி தொடங்கியிருக்கிறோம். சூர்யா சார் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தோடு இருக்காங்கன்னு எனக்கு தெரியும்.

https://www.youtube.com/watch?v=htR7Q3GJlgM

ஆர் ஜே பாலாஜி பேட்டி:

நீண்ட நாட்களாக இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் இரண்டு வருடமாக இந்த படத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய காத்திருப்புக்கு இந்த படம் வொர்த்தாக இருக்கும். இன்னும் நிறைய டைம் எடுத்துக்கொள்ள எனக்கு ஐடியா இல்லை. இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் படம் ரிலீஸ் உட்பட பல அப்டேட்டுகளுக்கு உங்களை வந்து சந்திக்கப் போகிறோம். ஏப்ரல் 10-ஆம் தேதி படம் ரிலீஸ் கிடையாது.

ரீலிஸ் அப்டேட்:

ரிலீஸ் தேதி மாதிரி, எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை. நான் தயாரிப்பாளரை தொடர்ந்து அடிக்கிறேன் என்று நிறைய விஷயங்களை அவர்களாகவே சோசியல் மீடியாவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட காத்திருப்பதற்கு உங்களுக்கு கோபத்தை கொடுத்திருக்குன்னு எனக்கு புரியுது. நான் முழுமையாக அதை மதிக்கிறேன். சீக்கிரமாகவே அப்டேட் உடன் உங்களை மீட் பண்ணுகிறேன். உங்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full