'கருப்பு' படத்தின் மாஸ் வெற்றி, கருப்பசாமிக்கு 18 அடி அரிவாள் சாத்திய இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி

By subhashini · 24/5/2026

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், திரிஷா, சுவாசிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பல பிரச்சினைகளைத் தாண்டி கருப்பு படம் வெளியாகி இருக்கிறது.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்களில் கருப்பு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு படத்தினுடைய கிளைமேக்ஸ் காட்சியில் வரும் போது சிலர் தியேட்டரில் சாமி ஆடும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இது சூர்யா உடைய மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கிறது.

கருப்பு படம்:

இந்த படம் சூர்யா உடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தே என்று சொல்லலாம். கருப்பு படம் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது. இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து படத்தின் ஹீரோ சூர்யா, ஆர்ஜே பாலாஜி, தயாரிப்பாளர் என பலருமே நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் கருப்பு படத்தின் வெற்றிக்கு கருப்புசாமிக்கு 18 அடி அரிவாளை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி சாத்தியிருக்கிறார்.

பாலாஜி செய்த நேர்த்திக்கடன்:

மதுரை அருகில் அழகர் கோவில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு இந்த பெரிய வருவாளை ஆர்.ஜே பாலாஜி அவர்கள் செலுத்தி இருக்கிறார்கள். கோவிலில் அரிவால் சாத்துவது தான் பிரசித்தி பெற்ற நேர்த்திக்கடனாக பார்க்கப்படுகிறது. கருப்பு படத்தின் டீம் அறிவால் சாத்திய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Dream Warrior Pictures (@dreamwarriorpictures)

பாலாஜி பேட்டி:

பின் இதை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் பாலாஜி, இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என்று ரொம்பவே தீர்க்கமாக நம்பினேன். இந்த படத்தை கடவுள் கொண்டு போய் சேர்ப்பார் என்று நம்பிக்கை இருந்தது. முதல் நாள் ரிலீஸ் கஷ்டமாக இருந்தது. ஆனால், ரிலீஸ் ஆகும் போது இந்த படம் பயங்கர பெரிய படமாக எல்லோருக்கும் பிடித்த படமாக மாறும் என்று நான் நம்பினேன். அதே மாதிரி இப்ப நடந்திருக்கிறது. எல்லோருக்கும் ரொம்ப நன்றி என்று கூறியிருக்கிறார்

behindtalkies AMP · Quick view
View full