'சிறை' படத்தைப் பார்த்த பின் எனக்கு அவமானமாக இருக்கு - இயக்குனர் ஆர்கே செல்வமணி ஓபன் டாக்

By subhashini · 23/12/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் கணேசனின் ஆவார். இவர் லண்டனில் படிப்பை முடித்து சினிமாவில் உதவிஇயக்குனராக சேர்ந்தார். பின் இவர் விஷ்ணுவர்தனின் உதவி தயாரிப்பாளராக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் எல்கே அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை லலித் குமார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அவர்களுடைய கதையை வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார்.

சிறை படம்:

இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் ஆர்கே செல்வமணி, நான் நிறைய போலீஸ் கதைகள் எடுத்து இருக்கிறேன். ஆனால், என்னுடைய படங்கள் கமர்சியலாக தான் இருக்கும்.

ஆர்.கே.செல்வமணி பேட்டி:

இந்த சிறை படத்தை பார்த்த பிறகு நான் இன்னும் என்னுடைய படங்களில் செய்திருக்கலாம் என்று அவமானமாக இருக்கு. நான் இப்போ படம் பண்ணினால் கூட இந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் அளவுக்கு பண்ண முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. நான் படம் பண்ணும் போது மன்சூர் அலிகான் என்னிடம், என்னுடைய பெயர் முஸ்லிம் பெயராக இருக்கு. மாத்தி வெச்சிடலாமா அண்ணே என்று கேட்டார். சிறை திரைப்படம் இஸ்லாமியர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் படமாக இருக்கும்.

படம் பற்றி சொன்னது:

நிறைய சமயங்களில் அந்த மக்களோட உணர்வை புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம். நான் கூட முஸ்லிம்களை வில்லனாக காண்பித்திருக்கிறேன். நாம் அப்படியே பார்த்து பழகினதால் அப்படி வைத்து விட்டேன். ஆனால், இந்த சிறை படத்தில் வருகிற ஒரு காட்சி இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அந்த காட்சியை பார்க்கும்போது மதத்தின் பெயரால் அரசியல் செய்தவர்களை செருப்பால் அடித்த மாதிரி இருந்தது. இந்த படத்தை எப்படி சென்சார் செய்தார்கள் என்று யோசிக்க வைக்கிற அளவுக்கு படத்தில் நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full