விஜயின் அரசியல் நகர்வு சூப்பர், கண்டிப்பாக ஜெயிப்பார் - எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்ன விஷயம்

By subhashini · 10/12/2024

விஜயின் அரசியல் பயணம் குறித்து இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார். அதோடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார்.

இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சி கொடியை ஏற்றி உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி இருந்தார். அந்த கட்சி கொடியில் வாகை மலரும் இரு பக்கமும் யானை உருவம் இருந்தது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார் தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு:

மேலும், மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய்மறக்க வைத்தது. அதோடு இந்த மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான ரசிகர்களும், தொண்டர்களும் திரண்டு வந்து இருந்ததை பார்த்த விஜய் எமோஷனல் ஆகி கண்கலங்கி இருந்தார். அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய்னுடைய பேச்சும் அனல் பறக்க இருந்தது. பின் மாநாட்டில் விஜய், தன் கட்சி கொள்கைளை குறித்து பேசி இருந்தார்.

விஜய் அரசியல்:

அதுமட்டுமில்லாமல் இந்த மாநாட்டில் இவர் பாஜக, திமுக கட்சிகள் செய்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து பேசியிருந்தது மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயின் மாநாட்டிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்திருந்தாலும் வழக்கம்போல சில அரசியல் கட்சிகள் அவரை விமர்சித்தும் அவர் கருத்துக்களுக்கு கன்னடம் தெரிவித்தும் இருந்தார்கள். இதை அடுத்து தன் கட்சிக்காக ஒரு புதிய டிவி சேனல் திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சேனலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செய்திகள், விஜயினுடைய சுற்றுப்பயணம் உட்பட எல்லா விவரத்தையும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி:

இதை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் ஏழாம் தேதி சென்னையில் நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த விஜய், அரசியல் குறித்தும் எதிர்க்கட்சி தலைவர்களை குறித்தும் பேசி இருந்தார். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமால்வளவன் குறித்து பேசி இருந்தது மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவருடைய தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Puthiya Thalaimurai Tv (@puthiyathalaimurai)

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

அதாவது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.ஏ சந்திரசேகர், அரசியலில் விஜய் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவருடைய அரசியல் நகர்வு நன்றாக இருக்கிறது என்று கூறியிருந்தார். உடனே அங்கிருந்தவர்கள், விஜய் விசிகவுடன் கூட்டணி வைப்பாரா? அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அவருடைய பேச்சை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, நான் இங்கு வந்திருக்கும் நோக்கமே வேற, என்னிடம் வேறு ஏது கேட்டாலுமே என்று சொல்லிவிட்டு அமைதியாக அந்த இடத்திலிருந்து கடந்து சென்றார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full