அந்த படத்தின் க்ளைமேக்ஸை மாத்தணும்னு ஆர்.பி. செளத்ரி சார்கிட்ட சொன்னப்போ - இயக்குநர் சசி எஸ்க்குளுசிவ்

ஆர்.பி.சௌத்ரி பற்றி சசி சொன்னது

By subhashini · 11/6/2026

தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நூறு சாமி. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி பற்றி இயக்குனர் சசி சொன்னது, சொல்லாமலே படத்தின் உடைய கிளைமாக்ஸில் முதலில் நாக்கை வெட்டிக்கொள்வது போன்ற காட்சிகள் கிடையாது. வேறொரு கிளைமாக்ஸ் தான் எழுதி வந்தேன்.

நூறு சாமி படம்:

முதலில் முடிவு செய்து வைத்திருந்த கிளைமாக்ஸ் வைத்தே நான் ஒரு படப்பிடிப்புக்கு கிளம்பி விட்டேன். ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய பதினைந்து நாளில் தான் இந்த கிளைமாக்ஸ் ஐடியா எனக்கு வந்தது. கிளைமாக்ஸ் படம் நிச்சயமாக காலத்திற்கும் நிற்கும் என்று நான் முடிவு செய்தேன். ஆனால், அதை அமைப்பதற்கான திரைக்கதை என்னிடம் இல்லை, அதை எழுதுவதற்கான நேரமும் என்னிடம் இல்லை. ப்ரொடக்ஷன் மேலாளர் என்னிடம் படப்பிடிப்புக்கு கிளம்ப வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

சசி பேட்டி:

அப்போது நான் சவுத்ரி சாரை சந்தித்து கிளைமாக்ஸை மாற்ற வேண்டும் என்று சொன்னேன். உடனே அவர், ஏன் மாற்ற வேண்டும்? எந்த ஃகிளைமேக்ஸிற்கு தானே உனக்கு சான்ஸ் கொடுத்தேன். இப்போது உனக்கே உன் கிளைமாக்ஸ் மீது நம்பிக்கை இல்லை என்றால் நான் எப்படி படத்தை எடுப்பது என்று கேட்டார். உடனே நான், இல்லை சார் இந்த கிளைமாக்ஸ் இருந்தால் ஹிட் ஆகும். ஆனால், நான் எடுக்கப் போகும் கிளைமாக்ஸ் வைத்தால் படம் அனைத்து மொழிகளிலும் ரீமேக் ஆகும் என்று சொன்னேன். உடனே அவர் டைரக்டர் சொல்வதை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.

சௌத்ரி பற்றி சொன்னது:

படம் முடிந்த பிறகு அவர் படத்தை பார்த்தார். படத்தினுடைய இறுதியில் தயாரிப்பு சூப்பர் ஹிட் பிலிம்ஸ் என்ற கார்டு தான் வரும். அப்போது நான் இறுதியில் என்னுடைய பெயரும் வரவேண்டும் என்று கேட்டேன். அதற்கும் அவர் ஒப்புக்கொண்டார். அப்போது இதைப் பற்றி நான் அவரிடம் கேட்கப் போகிறேன் என்று சொன்னவுடன் யாருமே வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், நான் கேட்ட உடனே சவுத்ரி சார் ஒத்துக் கொண்டார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full