இயக்குனர் செல்வராகவன், தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் வித்தியாசமான கதைகளை எடுக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர், தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் கதை ஆசிரியர் பணியாற்றினார்.அதன் பின்னர் தனுஷை வைத்து 2003 ஆம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’ படத்தை இயக்கினார் இந்த படம் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தது.

அதன் பின்னர் இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.அதிலும் இவர், தனுஷை வைத்து எடுத்த ‘புதுப்பேட்டை’ படம் ரசிகர்கள் மத்தியில் அப்போது வரவேற்பைப் பெற தவறவிட்டாலும் இன்றளவும் இப்படம் பேசப்பட்டு வருகிறது. அதே போல காதல் கொண்டேன் படத்திற்கு பின்னர் செல்வராகவன் தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்.

Advertisement

ஆர் கே புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த படத்திற்கு யுவன் இசையப்பக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருந்தனர். இந்த படத்திற்காக போட்டோ ஷூட் கூட நிறைவடைந்த நிலையில் சில பல காரணங்களால் இந்த படம் கைவிடபட்டது. இப்படி ஒரு நிலையில் இயக்குனர் செல்வராகவன் மகனுக்கு பிடித்த படம் பற்றி கூறியுள்ளார் செல்வராகவன்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலக புகைப்பட கலைஞர்கள் தினம் கொண்டாடபட்டது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் ‘மயக்கம் என்ன’ படத்தின் கிளிப்பிங் ஒன்றை பகிர்ந்து செல்வராகவனை டேக் செய்து இருந்தார்.அதற்கு நன்றி தெரிவித்த செல்வராகவன், போட்டோகிராஃபி பிடிக்கும். ‘மயக்கம் என்ன’எனது மனதுக்கு நெருக்கமான படம். புகைப்பட தின வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement