கருப்பு சாமியும் கன்றுக் குட்டியும் கண்களை கலங்க வைத்தது - நெகிழ்ச்சியில் செல்வராகவன் சொன்ன விஷயம்

By subhashini · 11/10/2025

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரன், பார்த்திபன், சமுத்திரகனி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. அதோடு பண்பாடு, கலாச்சாரம், அகிம்சை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த படத்தை கொண்டு சென்றிருப்பதால் பலரும் பாராட்டினார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை பாராட்டி இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்வராகவன் பதிவு:

அதில் அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம் இட்லி கடை. கருப்பு சாமியும் கன்றுக்குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றது. நமது ஊரையும் நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என்று இப்பொழுதுதான் புரிகின்றது. வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி என்று கூறியிருக்கிறார். அதோடு செல்வராகவன் போட்ட படத்தில் இட்லி கடை படத்தில் இடம்பெற்ற எத்தனை சாமி பாடலும் இடம்பெற்று இருக்கிறது. படத்தில் தனுஷின் தந்தை ராஜ்கிரன் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து ஒரு கிராமத்தில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

View this post on Instagram

A post shared by Behindwoods News (@behindwoods_news)

இட்லி கடை:

தினமும் காலையில் எழுந்து ராஜ்கிரண் கோயிலுக்கு சென்று ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மி கல்லில் சட்னி அரைத்து ஒரு சிறிய கூரை வீட்டில் தான் தன்னுடைய இட்லி கடையை நடத்தி வருகிறார். அந்த ஊருடைய அடையாளமாகவே ராஜ்கிரன் இட்லி கடை தான் இருக்கிறது. அதோடு தனுஷ் குண்டு செட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது என்று நினைத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்புகிறார். வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பெரிய நிறுவனராக சத்யராஜ் இருக்கிறார். அவருடைய நிறுவனத்தில் ஒரு பெரிய பொறுப்புக்கு தனுஷ் செல்கிறார்.

படத்தின் கதை:

அதற்குப்பின் சத்யராஜின் மகளை தனுஷ் கல்யாணம் செய்ய நினைக்கிறார். சத்யராஜின் மகன் தான் அருண் விஜய். அவருக்கு தன் தங்கையை தனுஷுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதில் விருப்பமே இல்லை. அப்போதுதான் தன்னுடைய தந்தை இறந்த செய்தி தனுஷுக்கு தெரிகிறது. அதைக் கேட்டவுடன் திரும்பவும் தனுஷ் தன்னுடைய சொந்த ஊருக்கே வருகிறார். தனுஷ், சத்யராஜின் மகளை திருமணம் செய்து கொண்டாரா? தன்னுடைய அப்பா நேசித்த இட்லி கடையை தனுஷ் எடுத்து நடத்தினாரா? தனுசுக்கும் அருண் விஜய்க்கும் இடையே என்ன பகை? என்பது தான் படத்தின் மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full