பான் இந்தியா ஒரு அசிங்கமான கல்சர், சினிமாவே செத்து போச்சு - ஆதங்கத்தில் இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்த தகவல்
சினிமாவின் நிலை குறித்து இயக்குனர் செல்வராகவன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்யாசமான மற்றும் தரமான படங்களை கொடுப்பதில் இயக்குனர் செல்வராகவனுக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. காதல் கொண்டேன் படம் துவங்கி NGK வரை இவரது படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன்.
அப்போதே பிராம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் செல்வராகவனின் ஒரு கனவு படம் என்றே கூறலாம். இந்த படம் நடிகர் பார்திபனுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்த படத்தில் ஆண்ட்ரியா, ரீமா சென், கார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படம் வெளியான போது பெரிதாக வரவேற்கப்படவில்லை. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரீ – ரிலீஸ் ஆகி இருந்தது. அப்போது இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. 15 ஆண்டுகள் கழிந்தாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை.
செல்வராகவன் திரைப்பயணம்:
இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் கேட்டு இருந்தார்கள். பின் இது தொடர்பாக போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள். தற்போது செல்வராகவன் படங்களில் கவனம் செலுத்தியும் வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் செல்வராகவன், ஃபேன் இந்தியா என்ற ஒரு அசிங்கமான கல்ச்சர் இப்போது வந்திருக்கிறது. இதனால் இன்றைய சினிமா எல்லாமே கமர்சியல் ஆகிவிட்டது. ஒரு குத்துப்பாட்டு இருக்கணும், பயங்கரமாக டான்ஸ் ஆடணும், நிறைய சண்டை போடணும்னு என்று இருந்தால் படத்தினுடைய தரம் என்ன ஆவது? ஒரு நல்ல படம் எப்போ பார்த்தோம் என்று யோசித்து பாருங்கள்.
செல்வராகவன் பேட்டி:
எல்லாமே முடிந்து போனது. எல்லாமே குத்தி குத்தி கிழித்து விட்டார்கள். இப்பொழுது இருக்கும் நிலைமையில் நல்ல படம் எடுப்பதற்கு இங்கு ஆட்கள் கிடையாது. கிழக்கு சீமையிலே, மூன்றாம் பிறை மாதிரியான படங்கள் எல்லாம் வந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது? இப்போதைக்கு படம் ஓடினால் போதும், காசு சம்பாதித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அது தவறு இல்லை. எல்லோருமே காசுக்காக தான் படம் பண்ணுகிறோம். ஆனால், அது மட்டும் தான் சினிமாவினுடைய நிலைமை என்று ஆகிவிட்டது. ரியல் சினிமா வருவதெல்லாம் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படம் தான் அப்படி வருது. எனக்கு என்னமோ இது கொரோனாவுக்கு பின்வந்த மாற்றமாகத் தான் தெரிகிறது.
சினிமா நிலை:
இப்ப எல்லோருமே ஆயிரம் கோடி வேணும் என்று தான் படம் எடுக்கிறார்கள். படம் ரிலீசான ஐந்தாவது நாளே ஐயாயிரம் கோடி போட்டு விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது உண்மையிலேயே வசூலித்ததா? இல்லையா? என்பதெல்லாம் தெரியவே இல்லை. பெரும்பாலானவர்கள் ஹீரோவை சந்தோஷப்படுத்தவே செய்கிறார்கள். அவர்களை சந்தோஷ படுத்தினால் அடுத்த படம் கொடுப்பார்கள் என்று தான் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். நல்ல சினிமா செத்துப் போச்சு. இனிமேல் ஒரு நல்ல சினிமாவோ அல்லது பாரதிராஜா போன்ற இயக்குனர்களோ வரவே முடியாது. காரணம், இங்கு ஒரு படம் எடுத்தால் சர்வேயாகவே முடியவில்லை. இப்போது 99 சதவீத படங்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் மக்கள் இரண்டு வருடமாக வீட்டுக்குள்ளே இருந்து அவர்களுடைய மூளைக்கு என்னமோ ஆகிவிட்டது.
https://www.youtube.com/watch?v=L9NP7ORoRvs
பான் இந்தியா சினிமா:
இதை நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. பான் இந்தியா படங்கள் மீது எனக்கு உடன்பாடே கிடையாது. ஒரு படம் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வரவேண்டும் என்று விரும்பினால் இந்த மாதிரியான படங்கள் தான் வரணும். கமர்சியலா எடுத்தால் எல்லாரும் பார்த்து விடுவார்கள் என்று நம்பி தான் பான் இந்தியா படங்கள் எடுக்கிறார்கள். எல்லா பான் இந்தியா படங்களிலும் 4 பாடல்கள் இருக்கும். அதில் முக்கால்வாசி ஹீரோயினி ஆடி விடுவார்கள். பான் இந்தியா படங்களில் கலைநயம் இருப்பது போல தெரியவில்லை. பான் இந்தியா முகத்தால் இந்தியில் பாலிவுட் படங்களையே மறந்து விட்டார்கள். அங்கேயும் நாம் தென்னிந்திய படங்களை தான் பார்க்க விரும்புகிறார்கள். இன்று டாப்பில் இருப்பவர்கள் எல்லோருமே இங்கிருந்து சென்றவர்கள் தான். பான் இந்தியா படங்களால் ரசனை செத்துப் போச்சு என்று ரொம்ப வேதனையுடன் கூறியிருக்கிறார்.