தனது மகள் நடித்த மாவீரன் படம் குறித்து ஷங்கர் போட்ட பதிவு - என்ன சொல்லியுள்ளார் பாருங்க.
மாவீரன் படம் குறித்து இயக்குனர் சங்கர் பதிவிட்டு இருக்கும் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை, அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் சிங்கர், பன்முகம் கொண்டு திகழ்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார்.
மாவீரன் படம்:
அனைவரும் எதிர்பார்த்த மாவீரன் படம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. படத்தில் கரையோரம் வாழ்ந்து வரும் மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அரசு கொண்டு செல்கிறது. ஆனால், அரசு வழங்கிய அந்த அடுக்குமாடி வீடு தரமில்லாமல் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் கதாநாயகன் சத்யா குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது.
#Maaveeran #Mahaveerudu @Siva_Kartikeyan @madonneashwin @AditiShankarofl #Saritha @iYogiBabu @DirectorMysskin @iamarunviswa @vidhu_ayyanna @bharathsankar12 @RedGiantMovies_ pic.twitter.com/pRZAzHlD6G
— Shankar Shanmugham (@shankarshanmugh) July 15, 2023
படத்தின் கதை:
பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையில் அரசியலுடைய அதிகாரம் இருப்பதால் கதாநாயகனால் எதுவும் செய்யாமல் போகிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கதாநாயகன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு குரல் கேட்கிறது. அதுவரை என்ன செய்வதென்று புரியாமல் பரிதவித்த கதாநாயகன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். அந்த குரலினால் அவருடைய வாழ்க்கையே மாறுகிறது. அந்த குரல் யார்? கதாநாயகனின் பிரச்சனை தீர்ந்ததா? அரசியலின் அதிகாரம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் வசூல்:
மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். அதோடு முதல் நாளில் மட்டுமே இந்த படம் ஒன்பது கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த வாரம் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் மாவீரன் படம் தான் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்திருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழு உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் மாவீரன் படம் குறித்து இயக்குனர் சங்கர் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.
சங்கர் பதிவு:
அதில் அவர், மாவீரன் அற்புதமாக எழுதப்பட்ட மடோன் அஸ்வினி புத்திசாலித்தனம். கிளாஸ் மாஸ் என்டர்டைனர். திரைக்குள் உள்ள அற்புதமான நகைச்சுவை உணர்வு ரசிக்கும்படியாக உள்ளது. சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பினை வழங்கி இருக்கிறார். அதிதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சரிதா, யோகி பாபு மற்றும் மிஸ்கின் சிறப்பாக நடித்துள்ளனர். ஆக்சன் காட்சிகள் மற்றும் நடனம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நிச்சயமாக குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு மகிழ்ச்சியான புதிய அனுபவம் என்று கூறியிருக்கிறார். இப்படி பதிவிட்ட சங்கரின் பதிவு தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.