சங்கரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு- வேள்பாரி படம் குறித்து மாஸ் அப்டேட் சொன்ன இயக்குனர்
வேள்பாரி படம் குறித்து இயக்குனர் சங்கர் கொடுத்திருக்கும் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அந்த வகையில் கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இந்தியன்’ படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு, கஸ்தூரி, நிழல்கள் ரவி , அஜய்ரத்னம் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2’ படம் உருவாகி இருக்கிறது.
இந்தியன் 2 படம்:
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். பல பிரச்சனைகளின் நடுவில் இந்தியன் 2 திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சங்கர் படங்கள்:
இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது. இதை அடுத்து சங்கர் அவர்கள் ராம்சரனின் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தினுடைய வேலைகளும் கிட்டத்தட்ட நிறைவடைந்து இருக்கிறது. இதை அடுத்து இவர் 'இந்தியன் 3' படத்திற்கான வேலையில் இறங்க இருக்கிறார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் சங்கர் கமிட் ஆகி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் விழாவில் வேள்பாரி படம் குறித்து சங்கரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
சங்கர் பேட்டி:
அதற்கு அவர், அந்தக் கதையை படிக்க சொல்லி நிறைய பேர் கேட்டிருந்தார்கள். அந்த சமயத்தில் எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கொரோனா வந்ததற்கு பிறகு தான் வீட்டில் சும்மா இருந்த நேரத்தில் படிக்கலாம் என்று ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க என்னுடைய மனதில் காட்சிகளாக வந்தது. படித்து முடித்ததுமே இதை எப்படியாவது படமாக்கப் பண்ணனும் என்று நினைத்தேன்.
வேள் பாரி படம் குறித்து சொன்னது:
உடனே அந்தக் கதையை எழுதிய சு.வெங்கடேசன் இடம் பேசி அதற்கான ரைட்ஸ் வாங்கி விட்டேன். வேள் பாரியை மூன்று பாகங்களாக திரைக்கதை எழுதி முடித்து இருக்கிறேன். கதை ரெடியாக தான் இருக்கிறது. யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் முடிவு பண்ணவில்லை. கூடிய விரைவில் அது சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்