இந்த படம் என் மனதிற்கு ரொம்பவே நெருக்கம், பிளாக் பஸ்டர் - இயக்குனர் சங்கரின் புகழாரம்

By subhashini · 28/2/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி.

இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், சிங்கம் புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார். இன்று வெளியாகிருக்கும் தாய் கிழவி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

தாய் கிழவி படம்:

இந்நிலையில் தாய்க்கிழவி படத்தை பாராட்டி இயக்குனர் சங்கர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், தாய் கிழவி படம் என்னுடைய மனதிற்கு ரொம்பவே நெருக்கமான படைப்பாக இருக்கிறது. படத்தினுடைய முதல் பாதி ரொம்ப ஜாலியாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது. அந்த ஆம்புலன்ஸ் காட்சியிலிருந்து படம் அப்படியே மாறி இரண்டாம் பாதியில் இறுதியில் ஒரு மறக்க முடியாத மாபெரும் பிளாக்பஸ்டர் ஆக உருவெடுக்கிறது.

சங்கர் பதிவு:

பேராசை, கல்லாமை, வாழ்க்கையினுடைய நோக்கம் மற்றும் பெண் முன்னோட்டம் என பல கருப்பொருள்கள் இந்த படத்தில் அழகாக கையாளப்பட்டிருக்கிறது. சிறப்பான இயக்கம் எழுத்திற்காக இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு என்னுடைய பாராட்டுகள். அனைத்து கதாபாத்திரங்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சரியான நடிகர்களுடைய தேர்வு. அனைவருடைய கூர்மையான நடிப்பும் இந்த படத்தை ஒரு சிறந்த படமாக மாற்றி இருக்கிறது.

சங்கர் புகழாரம்:

ராதிகா அவர்களுடைய நடிப்பு திறமையை நாம் அனைவருமே அறிந்தது தான். ஆனால், இந்த படம் அது இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கின்றது. நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. அவருடைய மாறுபட்ட இசை அணுகுமுறை படத்தின் மிக சரியாகப் புரிந்து இருக்கிறது. இந்த சிறப்பான படத்தை வழங்கியதற்காக சிவகார்த்திகேயனுக்கு என்னுடைய பாராட்டுக்கள். படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்குமே என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full