'இந்தியன் 2'ல் ஏ.ஆர்.ரகுமானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்

By subhashini · 8/7/2024

'இந்தியன் 2' படத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு பதில் அனிருத்தை தேர்வு செய்ததற்கான காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன். இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘இந்தியன்’.

இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு, கஸ்தூரி, நிழல்கள் ரவி , அஜய் ரத்னம் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. மேலும், சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2’ படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ரகுல் பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை லைகா உருவாகி தயாரித்து இருக்கிறது.

'இந்தியன் 2' படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். படம் எடுக்கும் போதே பல சர்ச்சைகள் வந்தது. இதனால் சிறிய இடைவெளிக்கு பின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து விட்டார்கள். அதில் 8 பேர் படுகாயமடைந்து இருந்தார்கள். இதனால் மீண்டும் படப்பிடிப்பு நின்று விட்டது. மேலும், பல போராட்டங்களுக்கு நடுவில் 'இந்தியன் 2' திரைப்படம் மீண்டும் தொடங்கி இருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.

படம் குறித்த தகவல்:

சமீபத்தில் இந்த படத்தினுடைய பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அனைவர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘இந்தியன் 2’ படம் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 'தசாவதாரம்’ படத்தைப் போல கமல் இப்படத்தில் பல தோற்றங்களில் நடித்துள்ளார் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் அனிருத்தை தேர்வு செய்ததற்கான காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சங்கர்- ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி:

இயக்குனர் சங்கர் முதன்முதலாக இயக்கிய 'ஜென்டில்மேன்' படத்தில் இசையமைத்து இருந்தவர் ஏ.ஆர்.ரகுமான். அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 போன்ற பல படங்களுக்கு பணியாற்றியிருந்தார்கள். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இதனால் 'இந்தியன் 2' படத்திலும் இவர்கள் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியன் 2 படத்தில் ஏ. ஆர்.ரகுமானுக்கு பதிலாக அனிருத் கமிட்டாகி இருந்தார்.

இயக்குனர் சங்கர் பேட்டி:

இதற்கு பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சங்கர், இந்தியன் 2 படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தபோது ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே 2.0 பட வேலையில் பிஸியாக இருந்தார். அதனால் அவரை தொல்லை செய்ய வேண்டாம் என்று நினைத்து தான் அனிருத்தை தேர்ந்தெடுத்து இருந்தோம். அதுமட்டுமில்லாமல் அனிருத்தின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை தேர்ந்தெடுத்ததற்கு அதுவும் ஒரு காரணம். இது குறித்து கமலஹாசனிடம் கேட்டதற்கு அவர், 'எனக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் இளையராஜாவை தான் சொல்லுவேன். அதனால் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இயக்குனர் உடைய விருப்பம்' என்று கூறியாததாக சங்கர் தெரிவித்துள்ளார் .

behindtalkies AMP · Quick view
View full