வேள்பாரி நாவலை தழுவி காட்சிகள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை- இயக்குனர் சங்கரின் எச்சரிக்கை டீவ்ட்

By ·

வேள்பாரி நாவல் தொடர்பாக இயக்குனர் சங்கர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் வேள்பாரி நாவல் தொடர்பாக நடிகர் சங்கர் போட்டிருக்கும் எச்சரிக்கை பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

எழுத்தாளரும், மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சு. வெங்கடேசன். இவர்தான் வேள்பாரி என்ற நாவலை எழுதியிருந்தார். இது ஒரு வரலாற்று புகழ்பெற்ற நூல் என்று சொல்லலாம். இந்த நூல் வாசகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு முதன்முதலாக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தான் இந்த நாவலை வெளியிட்டு இருந்தார்.

சங்கர் பதிவு:

இந்த நூல் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. இந்த நாவலை தழுவி தான் படம் படம் எடுக்கப் போவதாக ஏற்கனவே ஒரு பேட்டியில் இயக்குனர் சங்கர் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த நாவலுக்கான காப்புரிமையை பெற்றிருப்பதாகவும் கூறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் வேள்பாரி நாவல் தொடர்பாக சங்கர் போட்டிருக்கும் பதிவில், அனைவரின் கவனத்திற்கு, சு. வெங்கடேசன் எழுதிய தமிழ் நாவலான 'வீர யுக நாயகன் வேள் பாரி'யில் இடம் பெற்றுள்ள காட்சிகள் பல திரைப்படங்களில் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதை கண்டு நான் கண் கலங்கினேன்.

வேள்பாரி நாவல் குறித்து சொன்னது:

சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் ட்ரெய்லரில் வேள்பாரி நாவலின் காட்சிகள் இருந்தது. அதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது. அந்த நாவலுக்கு காப்புரிமையை பெற்றவன் என்ற அடிப்படையில் திரைப்படங்கள், வலைத்தொடர்கள் மற்றும் எந்த ஊடகத்திலும் நாவலின் காட்சிகளை பயன்படுத்துவதை தயவு செய்து தவித்துக் கொள்ளுங்கள். படைப்பாளிகளின் உரிமைகளை மதிக்கவும்.

நெட்டிசன்கள் கேள்வி:

வேள்பாரி நாவலை தழுவிய காட்சி படங்களில் இருந்தால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதில் எந்த படம் என்று குறிப்பிடவில்லை. இப்படி ஆவேசமாக இயக்குனர் சங்கர் போட்ட பதிவிற்கு காரணம், சமீபத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா படத்தின் ட்ரைலர் இருக்குமோ?
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவரா படமா? என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இந்தியன் 2 படம்:

கடைசியாக கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், ப்ரீத் சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல பிரச்சனைகளின் நடுவில் வெளியான இந்தியன் 2 படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து இந்தியன் 3 படம் உருவாகி வருகிறது. இதை அடுத்து சங்கர் அவர்கள் ராம்சரனின் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை