மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் பிறந்தநாள் இன்று - மறவாமல் வாழ்த்து பதிவிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.

By subhashini · 2/5/2023

மறைந்த சீரியல் நடிகை சித்ராவுக்கு இயக்குனர் சிவ சேகர் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் முதன் முதலாக மக்கள் டிவியில் தொகுப்பாளினி தான் மீடியாவுக்குள் நுழைந்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை மனதை பாதித்த ஒன்று.

சித்ரா தற்கொலை :

இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார்.

கணவர் கைது :

அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று அவர் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்தார்கள். அதன் பெயரில் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், கடந்த 9ஆம் தேதி விஜே சித்ராவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

View this post on Instagram

A post shared by Siva Sekar (@siva_sekar_director)

சித்ராவின் பிறந்தநாள்:

இன்று சித்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் சிவ சேகரும் சித்ராவின் பிறந்தநாளுக்கு அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா என்று பதிவு செய்திருக்கிறார். தற்போது இயக்குனர் சிவசேகரின் பிறந்தநாள் வாழ்த்து பதிவு தான் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full