கங்குவா படம் ஹிட்டா? பார்த்தவங்க இது தான் சொன்னாங்க - இயக்குநர் சிவா சொன்ன விஷயம்
கங்குவா படம் குறித்து இயக்குனர் சிவா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தில் 1070 மற்றும் 2024 என்று வெவ்வேறு காலகட்டத்தில் கதை நகர்கிறது. இரண்டு காலகட்டத்தையுமே மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். தற்போது இருக்கும் காலகட்டத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர் ஒரு பவுண்ட்டி அண்டர். இவருக்கு ஜூடா என்பவருடைய மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து கங்குவா கதை தொடங்குகிறது. 1070ல் ஐந்து கிராமங்களை காட்டுகிறார்கள்.
கங்குவா படம்:
அதில் பெருமாச்சி தீவின் நாயகனாக வலம் வருபவர் கங்குவா. மேலும், கங்குவாவுக்கும் அவருடைய குழுவுக்கும் போர் செய்வது தான் குலத்தொழில். வீரமும் இயற்கை விளைந்த அந்த மண்ணை தன்னுடைய வசம் படுத்த ரோமானிய அரசு நினைக்கிறது. அவர்கள் அதற்காக கொடுவாவிற்கு பணத்த ஆசையை காட்டி தங்களுடைய வலைக்குள் கொண்டு வருகிறார்கள். அவனும் ஆசையால் பெருமாச்சி மக்களை நம்ப வைத்து கழுத்தறுகிறார். இதைக் கண்டு கங்குவாவும் அவருடைய இனமும் பொங்கி எழுகிறது.
படம் குறித்த தகவல்:
இதனால் அவனையும், அவனுடைய மனைவி மற்றும் மகனையும் கொள்ள வேண்டும் என்று இன மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், கங்குவா அதற்கு எதிராக நிற்கிறார். என் மகன் இனி உன் மகன் என்று சொல்லி கங்குவா கையில் தன் மகனை ஒப்படைத்து விட்டு கொடுவாவின் மனைவி உடன்கட்டை ஏறுகிறார். அதற்கு பிறகு என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொள்ள துடிக்கும் கொடுவாவின் பகை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.
இயக்குனர் சிவா பேட்டி:
மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு கங்குவா திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கிறது. சென்னை காசி திரையரங்கில் கங்குவா படத்தின் முதல் காட்சியை இயக்குனர் சிவா உற்சாகத்துடன் பார்த்திருக்கிறார். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில், அமெரிக்காவில் முதல் காட்சியை பார்த்தவர்கள், படத்தை பார்த்த என்னுடைய நண்பர்கள் எல்லோருமே போன் பண்ணி இருந்தார்கள். படம் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னார்கள்.
https://www.youtube.com/watch?v=S2zt33MpTCE
படம் குறித்து சொன்னது:
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கங்குவா படத்தினுடைய ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி,
இரண்டு ஆண்டு கால உழைப்பு இப்போது திரைக்கு வந்திருக்கிறது. கேரளா, ஆந்திரா, வெளிநாடுகளில் முதல் ஷோ முன்னாடியே ரிலீஸ் ஆகி இருக்கிறது. படம் பார்த்தவர்கள் எல்லோருமே ரொம்ப நல்லா இருக்கு என்றும் மிகப்பெரிய வெற்றி படம் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் 9 மணிக்கு தான் முதல் ஷோ. ரசிகர்களோடு அதை பார்த்தேன். தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு தந்து கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.