சித்தா பட இயக்குனருக்கு கோலாகலமாக நடந்த திருமணம், படையெடுத்து வாழ்த்திய கோலிவுட்டி பிரபலங்கள்

By subhashini · 2/2/2025

சித்தா பட இயக்குனருக்கு கோலாகலமாக திருமணம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் சு. அருண்குமார். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, நிதிலன், மணிகண்டன் ஆகியோரை போல நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் அருண்குமார்.

இவர் பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக
அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். அதை அடுத்து இவர் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி என்ற கமர்சியல் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

அருண்குமார் குறித்த தகவல்:

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை எடுத்து இவர் சித்தார்த்தை வைத்து சித்தா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்தது.

சித்தா படம்:

அதுமட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளையும் இந்த படம் வென்று தந்திருந்தது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் இவர் மீண்டும் தமிழ் சினிமா உலகில் கம்பேக் கொடுத்திருக்கிறார். இதை அடுத்து தற்போது இவர் விக்ரமை வைத்து வீர தீர சூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தூஷரா விஜயன் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அருண்குமார்-விக்ரம் கூட்டணி:

இந்த படம் வருகிற மார்ச் 27ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. இரண்டு பாடங்களாக உருவாகி இருக்கும் இந்த படத்தினுடைய இரண்டாம் பாகம் தான் முதலில் திரைக்கு வர இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் அருண்குமாருக்கு திருமணம் நடைபெற்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அருண்குமார் திருமணம்:

அதாவது, இயக்குனர் அருண்குமாரின் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் விஜய் சேதுபதி, விக்ரம், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, தூஷரா விஜயன், விக்னேஷ் சிவன், சசி, தயாரிப்பாளர் அருண் விஸ்வா என கோலிவுட் நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார்கள். தற்போது அருண்குமாரின் உடைய திருமண புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full