நடிகர் விஜய்யுடன் ஒரு படம் பண்ண இருந்தது, ஆனால் - பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பராசக்தி படம்:
இதை அடுத்து சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இது ஒரு பக்கம் இருக்க பராசக்தி படம் வெளியாகுவதற்கு முந்தைய நாள் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகுவதாக இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் காரணமாக அந்த படம் வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்தை விமர்சித்தும் ட்ரோல் செய்தும் இருந்தார்கள்.
சுதா பேட்டி:
இது தொடர்பாக கூட கோபத்தில் இயக்குனர் சுதா பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் விஜய் பற்றி சுதா அளித்த பேட்டியில், எனக்கு விஜய் சார் ரொம்ப பிடிக்கும். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதை நேரடியாகவே நான் விஜய் சாரிடம் சொல்லி இருக்கிறேன். நாங்கள் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமலே போய்விட்டது.
இசை வெளியீட்டு விழாவிலே நான், விஜய் சாரோட ஜனநாயகன் படத்தை FDFS-ல் பார்ப்பேன் என்று தெளிவாக சொல்லிவிட்டேன்.
விஜய் பற்றி சொன்னது:
அந்த படத்தினுடைய வெளியீட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் சென்சார் போர்ட் இவ்வாறு செய்தது. இது ரொம்பவே தவறு. எந்த படத்துக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது. ஜனநாயகன் படத்துடன் நாங்கள் போட்டி போட வேண்டும் என்று நினைக்கவே இல்லை. பண்டிகை விடுமுறை எங்களுக்கும் தேவைப்பட்டது. அவ்வளவுதான் மற்றபடி போட்டி போட்டு எல்லாம் படம் வெளியிடவில்லை என்று கூறியிருக்கிறார்.