தமிழ் சினிமாவில இது தான் கொடுமையான விஷயம் - இயக்குனர் சுந்தர்.சியின் ஆதங்கம், என்ன சொல்லி இருக்காரு பாருங்க
தமிழ் சினிமா நிலை பற்றி இயக்குனர் சுந்தர்.சி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக சுந்தர்.சி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்களில் இவர் நடித்தும் வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கி, நடித்த அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இதை தொடர்ந்து இந்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் வெளியாகி இருந்தது. 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருந்த இந்த படமும் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
கேங்கர்ஸ் படம்:
இதை அடுத்து தற்போது சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் கேங்கர்ஸ். இதற்கு முன்பு சுந்தர்.சி-வடிவேலு கூட்டணியில் வின்னர், தலைநகரம் போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சத்யா இசையமைத்திருக்கிறார்.
கேங்கர்ஸ் படம் பற்றிய தகவல்:
வெங்கட் ராகவன் இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருக்கிறார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் சினிமா பற்றி சுந்தர்சி கூறியது, தமிழ் சினிமாவில் இருக்கிற ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால், ஹீரோ ஓகே சொன்னால் தான் படம் ஓகே ஆகும். எனக்கு ஒரு ஹீரோ கிட்ட போய் கதை சொல்லி அவர் ஓகே சொன்னால்தான் நான் இயக்கனர் ஆகணுமா? எனக்கு அப்படி படம் தேவையே இல்லை.
சுந்தர் சி பேட்டி:
இதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து. என்னை பொறுத்த வரைக்கும் நான் ரஜினி சார் கூட வேலை செய்திருக்கிறேன். கமல் சாரிடமும் வேலை செய்து இருக்கிறேன். அவங்க ரெண்டு பேருமே சொன்ன ஒரே வார்த்தை, நம்ம சேர்ந்து ஒரு படம் பண்ணுறோம். அதற்கு பிறகு தான் என்ன மாதிரியான படம் எடுக்க போறோம் என்றெல்லாம் பேசினோம். இப்போ சில வருஷமாக என்ன ஆகிவிட்டது என்றால், ஒரு ஹீரோ போய் ஓகே பண்ணால் தான் அந்த ப்ராஜெக்ட் ஓகே.
https://www.youtube.com/watch?v=Glg2-0s86OE
தமிழ் சினிமா நிலை:
இப்போ ஒரு ஹீரோகிட்ட கதை சொல்றேன். அது பிடித்தது என்றால் ஓகே, இல்லையென்றால் ப்ராஜெக்ட் ஓகே இல்லை. எனக்கு என்ன கோபம் என்றால், நான் இத்தனை வருஷமாக படம் பண்ணி சக்சஸ் கொடுத்ததுக்கு பிறகும் என்னோட திறமையை ஒருத்தர் சோதித்துப் பார்த்துதான் படம் பண்ணனுமா? அது எனக்கு வேண்டாம். கலகலப்பு மாதிரி ஒரு படம் எடுத்தால் அதில் இரண்டு அப் கம்மிங் ஹீரோ. நான் அவர்கள் திறமையை தான் பார்க்கிறேன். அவங்களோட மார்க்கெட் வேல்யூவை நான் பார்க்கவில்லை. இதுதான் நான் படங்கள் பண்ணும் பேட்டன் என்று கூறியிருக்கிறார்.