முதலில் விவேக் சார்கிட்ட தான் கதை சொன்னேன், ஆனா- 'அரசு' பட இயக்குனர் சுரேஷ் பகிர்ந்தது

By krithika · 21/1/2025

'அரசு' திரைப்படத்தில் வடிவேலு வேண்டா வெறுப்பாக தான் நடித்தார் என்று அந்தப் படத்தின் இயக்குனர் சுரேஷ் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் இயக்குனர் சுரேஷ் இயக்கி வெளியான படம் தான் 'அரசு'. இத்திரைப்படத்தில் சரத்குமாருடன் இணைந்து ரோஜா, சிம்ரன், சாய்குமார், வடிவேலு மற்றும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார்கள்.

மேலும், தயாரிப்பாளர் பாபு ராஜா தயாரித்த இப்படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ஒரு 'ஹிட் படம்' என அறிவிக்கப்பட்டது. பின், இந்தப் படத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு கன்னட மொழியில் 'இந்திரா' என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. கன்னட மொழியில் நடிகர் தர்ஷன், சரத்குமார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக 'அரசு' படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது படத்தின் இசை மற்றும் வடிவேலுவின் காமெடி தான்.

இயக்குனர் சுரேஷ்:

இந்நிலையில், நடிகர் வடிவேலு 'அரசு' படத்தில் வேண்டா வெறுப்பாக தான் நடித்தார் என்று அதன் இயக்குனர் சுரேஷ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில், நான் விவேக் சார், செந்தில் சார், கவுண்டமணி சார் கிட்ட எல்லாம் வொர்க் பண்ணி இருக்கிறேன். விவேக் சாருக்கு 'தூள்' படத்தில் காமெடி எழுதி இருக்கிறேன். இந்த வகையில 'அரசு' படத்துக்காக விவேக் சார் கிட்ட அப்ரோச் பண்ணினோம். அவர் காமெடி எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனால், செகண்ட ஆஃப்ல நான் இல்லை. என்னை கிளைமாக்ஸ் வரைக்கும் கொண்டு வாங்க சுரேஷ் நம்ம பண்ணுவோம் என்று சொன்னார்.

https://www.youtube.com/shorts/ZYy9go9jSsc

நோ சொன்ன விவேக்:

உடனே நான் இல்ல சார் காமெடி முதல் பாதி வரைக்கும் தான், இரண்டாம் பாதியில் சீரியஸா படம் வேற ஏரியாக்கு போயிடுது, வேணும்னா ஒரு சீன் நீங்க வந்துட்டு போற மாதிரி வைக்கலாம், கிளைமாக்ஸ் வரைக்கும் கொண்டு போக முடியாது என்று சொன்னேன். உடனே அவர் இல்ல, நம்ம அடுத்த படத்தில் பார்ப்போம்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப அப்செட் ஆயிடுச்சு. சரி வடிவேலுவை பிக்ஸ் பண்ணலாம் என்று நினைக்கும் போது சில பேர் ஒத்துக்கவில்லை. வடிவேலு ஓட கலருக்கு அக்ரஹாரத்தில இருக்கார்னு எப்படி மக்கள் ஏத்துப்பாங்கனு கேட்டாங்க.

வடிவேலுக்கு என் காமெடி ட்ராக் பிடிக்கல:

இல்ல சார் அக்ரஹாரத்தில் நிறைய பேர் கருப்பா இருக்காங்க நான் பார்த்திருக்கிறேன் என்று சௌத்ரி சாரை சமாதானப்படுத்தி, வடிவேலை வைத்து பண்ணோம். அப்போ வடிவேலு சார் என்ன காமெடி ட்ராக் என்றெல்லாம் கேட்கல, ஸ்பாட்டுக்கு வந்துட்டாரு. வந்த அன்னைக்கே அவர்கிட்ட போய் டயலாக் சொல்லிக் கொடுத்தும் அவருக்கு பிடிக்கவில்லை. இது என்னுடைய ஸ்டைலிலே இல்லை. இதுக்கு தான் நான் சொல்றது என்னுடைய ஆட்கள் நாலு பேருடன் டிஸ்கஸ் பண்ணா நல்லா வரும் என்று சொன்னார். இந்த காமெடி டிராக்கை பாத்துட்டு எனக்கு சிரிப்பே வரவில்லை என்று சொன்னார்.

வேண்டா வெறுப்பா நடித்த வடிவேலு:

அந்தக் கதைக்கு ஏத்த மாதிரி காமெடி டிராக்கை நான் தான் எழுதி இருந்தேன். எனக்கு ரொம்ப அப்செட் ஆயிடுச்சு. அப்புறம் சரத் சார் கிட்ட போய் நான் சொன்னேன். அவர் வந்து வடிவேல் சார் கிட்ட எனக்காக பேசினார். ஆனா, அவரு எனக்கு பத்து நாள் டைம் கொடுங்க காமெடி டிராக்கை நானே எழுதுகிறேன் என்று சொன்னார். இதைப் போய் ப்ரொடக்ஷன்ல சொன்னா அவங்க டென்ஷன் ஆகுறாங்க. எனக்கு இது முதல் படம் வேற. அப்புறம் நான் சரத் சார்கிட்ட பீல் பண்ண உடனே, அவர்தான் வடிவேல் சார் கிட்ட நீ நடி, நல்லா இல்லன்னா சௌத்ரி சார் கிட்ட சொல்லி ரீ-சூட் பண்ணிக்கலாம் என்று சொன்னார்,அப்புறம் தான் வடிவேலு வேண்டா வெறுப்பா அந்த படத்தில் நடித்தார் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full