படத்தில் நடிப்பதாக ஏமாற்றிய வடிவேலு, பின் கை கொடுத்த விவேக் மற்றும் கருணாஸ் - தயாரிப்பாளர் வி.சேகர் ஆதங்கம்

By subhashini · 15/6/2024

வடிவேலுவை நம்பி என்னுடைய மகன் வாழ்க்கையே போச்சு என்று தயாரிப்பாளர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். இவரை ராஜ்கிரண் தான் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். இவர் படத்தில் காமெடியராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு. இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

வடிவேலு திரைப்பயணம்:

இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டுக்கு முன்பு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் வடிவேலு உடன் நடித்த பல பேர் அவரை குறித்து விமர்சித்தும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். இருந்தாலுமே அதை வடிவேலு பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

தயாரிப்பாளர் வி.சேகர் பேட்டி:

இந்த நிலையில் தயாரிப்பாளரும், இயக்குனருமான வி சேகர் என்பவர் வடிவேலு குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜயகாந்த்தை அரசியல் காரணத்தினால் வடிவேலு கீழ்த்தரமாக பேசியிருந்தார். இருந்தாலும் விஜயகாந்த் அவருக்கு உதவியை செய்திருந்தார். அதே போல் வடிவேலு மோசமாக பேசியதில் நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். நான் சரவணப் பொய்யன் என்ற படத்தை இயக்கி இருந்தேன்.

தன் மகன் குறித்து சொன்னது:

அதில் என்னுடைய மகனை தான் கதாநாயகனாக நடிக்க வைத்திருந்தேன். அப்போ அந்த படத்தில் வடிவேலுவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி கேட்டேன். அவரும் நடிக்கிறேன் என்று சொன்னார். என்னை எப்படி தூக்கி விட்டீர்களோ அதே போல் உங்கள் மகனையும் தூக்கி விடுகிறேன் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார்.

https://www.youtube.com/watch?v=oO159m-siow

வடிவேலு குறித்து சொன்னது:

அதை நம்பி தான் நான் படத்தினுடைய வேலையையும் ஆரம்பித்தேன். பின் அரசியலுக்கு சென்றதால் வடிவேலு நடிக்கவே இல்லை. இனி நடிக்கவும் மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு என்னுடைய மகன் படத்தில் விவேக், கருணாஸ் நடிக்க வைத்தேன். எனக்கு வாக்கு கொடுத்துவிட்டு வடிவேலு மோசம் செய்தார் என்று எமோஷனலாக பேசிய பேசியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full