நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர். சமீபத்தில் கூட கே வி ஆனந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் காலமானார்.அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆட்டோகிராப் புகழ் கோமகன், பிரபல காமெடி நடிகர் பாண்டு ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : கோலங்கள், வாணி ராணி சீரியல் நடிகர் ஜோக்கர் துளசி மரணம் – இவருக்கும் இந்த நோயா ?

Advertisement

அதே போல நேற்று கோலங்கள், வாணி ராணி சீரியல் நடிகர் ஜோக்கர்துளசி காலமாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபல இசையமைப்பாளர் மனைவியும் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியின் அம்மாவுமான மணிமேகலை நேற்று (மே 9) அன்னையர் தினத்தில் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இப்படி ஒரு நிலையில் நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெங்கட் பிரபு தமிழில் இறுதியாக லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸ்ஸை இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து இவர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைபடம் நிறைவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்துகொண்டு இருக்கிறது.

Advertisement
Advertisement